Jallikattu bullsசினிமாசின்னத்திரைவாழ்வியல்

கடன் அடைக்கும் கடமையில் முத்து மீனா – பிரியாணி திங்கும் ஆர்வத்தில் மனோஜ்

விஜய் டிவி தொலைக்காட்சியில் சிறுகதைக்கு ஆசை சீரியல் நாளுக்கு நாள் மக்களின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது, அந்த வகையில் இந்த வாரம் மனோஜ் மற்றும் விஜயாவின் பித்தலாட்டம் அண்ணாமலை மற்றும் குடும்பத்திற்கு தெரிய வருகிறது வீட்டை அடமானம் வைத்ததும் தெரிய வந்துள்ளது இதற்கு பொறுப்பான மனோஜ் கொஞ்சமும் கவலை இல்லாமல் பசிக்குதே என்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கிறான்

மனோஜின் முட்டாள் தனம்

அண்ணாமலையோ விஜயா கிட்ட பேசாம, இப்படி துரோகம் பண்ணிட்டியேனு கோபத்தை காட்டிட்டு இருக்காங்க, ஆனா மனோஜ்க்கு இத பத்தி எதையுமே கவலையே இல்லாம பிரியாணி வாங்கிட்டு வந்து விஜயாவையும் சேர்த்து சாப்பிட கூப்பிடுறாரு, விஜயாவுக்கு மனோஜை திட்டவும் மனசு இல்ல, வெறுக்கவும் மனசு இல்ல,நானே வீட்டை அடமானம் வச்சு உனக்காக தானே இந்த அளவுக்கு பண்ண ஆனா நீ கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம பிரியாணி சாப்டுகிட்டு இருக்கியே அப்படின்னு திட்ட தான் செய்கிறார்களே தவிர மத்தபடி கோபத்தை கூட காட்டவே இல்லை

முத்து மீனா புரட்டிய 10 லட்சம்

மனோஜ் ஒரு பக்கம் ஹாயா உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்க, இரவும் பகலும் தூங்கியும் தூங்காமலும் நம்ம முத்துவும் மீணாவும் கடனை அடைக்கணுமே அப்படின்னு கஷ்டப்பட்ட வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு வராங்க ஆனா அப்ப கூட, நம்ம விஜயா 2 பேரும் ஊர் சுத்திட்டு வராங்க அப்படின்னு தான் சொல்றாங்க, மீனாவுக்கும் முத்தவுக்கும் அண்ணாமலைய யாரு முன்னாடியும் தலை குனிய வச்சு இருக்க கூடாது அது மட்டும் இல்லாம இந்த வீட்டை எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் அப்படின்னு தான் ஆசை அதுக்காக ஆசை ஆசையா வாங்கி கொடுத்த தங்க செயினை கூட வித்து 5 லட்சம் புரட்டறாங்க, எப்படியோ அப்படி இப்படின்னு புரட்டி 9 லட்சம் பக்கம் வந்துருச்சு இதை கொடுத்து, 3 மாசத்துக்கு முன்கூட்டியே சீக்கிரமா கடனை அடைச்சிடனும் அப்படின்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க

ஸ்ருதி ரவியின் தங்கமான மனசு

ரவிக்கும் ஸ்ருதிக்கும் ஒரு பக்கம் முத்து மீனாவும் மட்டும் கஷ்டப்படுறாங்களே அப்படின்னு அவங்களுக்கு கஷ்டமா இருக்கு அவங்களோட கஷ்டமான நேரத்துல நாங்களும் துணை இருக்கோம் அப்படின்னு சொல்றதுக்காகவே நம்ம ரவி ஒரு லட்சம் திரட்டி கொடுக்கிறார், இத பார்த்தா முத்துவுக்கு மீனாவுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு எதைத்தான் பொறுப்பில்லாம அண்ணன் இருந்தாலும் எப்பவுமே தம்பி நமக்கு துணையாய் இருக்கிறார் அப்படிங்கிற ஒரு சந்தோஷம் மட்டும்தான் அவருக்கு எப்பவுமே நிலையான நிலைச்சு இருக்கு

சிந்தாமணியின் மாஸ்டர் பிளான்

முத்துவும் மீனாவும் 10 லட்சத்தை புரட்டன கையோட நேரா பைனான்சியர போய் தான் பாக்குறாங்க அதுவும் மீனா விவரமா, இந்த பத்து லட்சத்தை எடுத்துக்கிட்டு கையோட ரிசப்டையும் கொடுங்க அப்படின்னு வாங்கி வச்சிக்கிறாங்க, பினான்சியல் ஓட திட்டம் இப்போ தவிரபடியாக போகுது இவங்க சாதாரண டிரைவர் பூ கட்டுறவங்க இவங்க எப்படி 10 லட்சத்தை உடனே திரட்டுனாங்க அப்படின்னு கேள்விக்கு மேல கேள்வி வேற கேட்டுக்கிட்டு இருக்காங்க இவங்க போன கையோட அடுத்து நம்ம வில்லியான சிந்தாமணி உள்ள என்ட்ரி ஆகுறாங்க, 48 லட்சம் கட்றதுக்கு இந்த மூணு மாசம் எல்லாம் பத்தாது, இன்னும் கொஞ்சம் டைம் வேணும்னா கேட்டு கெஞ்சறதுக்கு வந்தாங்களா அப்படின்னு கேக்குறாங்க சிந்தாமணி ஆனால் ட்விஸ்டே வேறயாச்சு இவ்வளவு சீக்கிரமா 10 லட்சத்தை கொண்டு வந்து கொடுப்பாங்கன்னு நானே நினைக்கலன்னு பினான்சியர் வேற சிந்தாமணி தலையில குண்டையே தூக்கி போடுறாங்க

மனோஜ் மீது போலீஸ் வழக்கு

எப்படியாவது அந்த வீட்டை விட்டு துரத்தி குடும்பத்தையே நடுத்தெருவுல கொண்டு வந்து நிறுத்தணும்னு நினைச்சா,இவங்க இப்படி பண்ணிட்டு இருக்காங்களா,அப்போ நீங்க வேற ஒன்னும் பண்ணுங்க என்ன இருந்தாலும் மனோஜ் அவங்க அப்பாவோட கையில எடுத்து போட்டு அதாவது போலியா கையெழுத்து போட்டு தானே காசு வாங்குனாரு இப்போ அத நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவரை அரெஸ்ட் பண்ண சொல்லுங்க எப்படியாவது அந்த குடும்பத்தோட மானம் போயே ஆகணும், என்னதான் காசு கொடுத்தாலும் அவ செஞ்சது தப்பு தானே கண்டிப்பா போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணுவாங்கனு ஐடியா கொடுக்கிறங்க, இனி அடுத்து மனோஜை போலீஸ் கைது செய்யப் போறாங்க, முத்துவும் மீனாவும் எப்படி காப்பாற்ற போறாங்க அப்படிங்கறத பொறுத்திருந்து பார்க்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *