Jallikattu bulls

மீனாவின் ஆபிரேஷனுக்காக முத்து செய்யும் நல்ல காரியம் – நெகிழவைக்கும் முத்துவின் காதல்

விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனாவிற்காக ஆபிரேஷன் நல்ல படியாக முடிய வேண்டுமென்று ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்வதை பார்த்து, மீனா மகிழ்ச்சி அடைகிறார், அதை தொடர்ந்து சீதா கராத்தே கிளாசில்,ஜஸ்ட் மிஸ்ஸில் அருனின் பார்வையில் இருந்து தப்பிக்கிறார்

credits -google

மீனாவிற்காக கடவுளிடம் வேண்ட சொல்லும் முத்து

மீனாவிற்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் உள்ளது, அதனால் மீனாவிற்கு ஆபரேஷன் செய்ய வேண்டும், இருந்தாலும் வாய்ப்பு குறைவு என்று டாக்டர் சொல்லி விட்டார், அதனால் மீனாவிற்கு குணமாகி குழந்தை பிறக்க வேண்டும் என்று முத்து முதியோர் இல்லத்தில் முதியோர்க்கு துணி பழங்கள் போன்றவை கொடுத்து விட்டு “என் மனைவிக்கு உடம்பு முடியல ஆபரேஷன் நடக்க போகுது, குணமாயிடணும்னு வேண்டிக்கோங்க ” என்று சொல்கிறார்

இதையெல்லாம் அங்கு பூ கொடுக்க வந்த மீனா பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சி அடைகிறாள்,முத்துவிடம் சென்று “என்னை கடவுள் காப்பாற்றுவரா?? தெரியல ஆனா நீங்க காட்டற அக்கறை எனக்கு எந்த குறையும் வரவிடாது “என்று சொல்லி நன்றி தெரிவிக்கிறார், நமக்கு எந்த குறையின்றி குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை கொடுக்கிறார் முத்து

அருண் மேல் இவ்வளவு பயமா??

அதை தொடர்ந்து சீதாவின் கராத்தே கிளாசிற்கு மீனா செல்கிறார், சீதாவோ கடுமையாக கராத்தே கற்று கொண்டிருக்கிறார், சீதாவிடம் மீனா முத்து செய்த நல்ல காரியத்தை சொல்லி பெருமை பட்டு கொண்டிருக்கிறார்

மாமா மாதிரி அருணும் உன்ன புருஞ்சுக்கிட்டு நடந்த சந்தோசமாக இருக்கும் என்று சொல்லி வருத்தம் தெரிவிக்கிறார் மீனா

credits -google

ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிக்கும் சீதா

பேசிகொண்டிருக்கும்போதே அருண் கராத்தே கிளாசிற்கு வர, மீனாவும் சீதாவும் ஒளிந்து கொள்கின்றனர், அருண் உள்ளே வந்ததும் “பொண்ணுகளுக்கு எதுக்கு கராத்தே கிளாஸ் மாஸ்டர், புருஷன அடிக்கவா?? என்று நையாண்டி செய்து கொண்டிருக்கிறார்

இறுதியில் இந்த கிளாசில் இருந்து டிராபிக் சரி செய்ய உதவிக்கு 4 ஆட்கள் வேண்டும் என்று கேட்க, கராத்தே மாஸ்டரும் “நீங்களே தேர்தெடுங்கள் என்று கூறி வரிசையாக நிற்க வைக்கிறார் ”

சீதாவிற்கு மாட்டிக்குவமோ என்ற பயத்தில் இதயம் வேகமாக துடிக்கிறது, ஒரு மாணவி பின் ஒழிந்து ஒழிந்து நிற்கிறாள், கடைசி வரைக்கும் அருண் பார்க்கவில்லை, ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்து விட்டார்

ஆனால் அருண் மீனாவை பார்த்து விட்டார், இங்கே எதற்கு வந்தீர்கள் என்று கேட்க, மீனாவும் பூ கொடுக்க வந்தேன் என்று சொல்கிறார், என்னை பழிவாங்க உங்க புருஷன் “சீதாவையும் என்னையும் பிரித்து விட்டார் ” என்று கூற “நீங்கள் எதுவும் செய்யாமலா?? சீதா வந்தாள் என கேள்வி கேட்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *