செய்திகள்தேசியம்

மேக் இன் இந்தியா எனக்கூறி கூறியே சிறுதொழில்களை அழித்துவிட்டீர்கள் :- ராகுல் காட்டம்

மேக் இன் இந்தியா எனக்கூறி கூறியே சிறுதொழில்களை அழித்துவிட்டீர்கள்.5 கோடி மக்களை மீண்டும் வறுமைகோட்டிற்கு கீழே தள்ளிவிட்டீர்கள் என நாடாளுமன்றத்தில் #ராகுல்காந்தி காட்டமாக பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சர் #நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் , இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, மேக் இன் இந்தியா எனக்கூறி கூறியே சிறுதொழில்களை அழித்துவிட்டீர்கள்.5 கோடி மக்களை மீண்டும் வறுமைகோட்டிற்கு கீழே தள்ளிவிட்டீர்கள் என காட்டமாக தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர், “You will never ever rule the TamilNadu” மக்களவையில் பேசியுள்ளார். மேலும், தமிழ்நாட்டிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும், .

ஒரு குடிமகனாக நாட்டில் நடைபெற்று வரும் விஷயங்கள் குறித்து கவலை கொண்டுள்ளேன், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா பாதிப்பால் 84% இந்தியர்களின் வருவாய் குறைந்துள்ளது.இந்தியாவின் 40% சொத்துகள் 10 பேரிடம் மட்டுமே இருக்கிறது என பல்வேறு குற்றாச்சாட்டுக்களை அடுக்காக முன்வைத்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *