பெற்றோர் குழந்தைகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த
பெற்றோர் குழந்தை இருவருக்கும் இடையேயான உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உளவியல் ஆலோசகர் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறும் வழிகாட்டுதல்கள் என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம். வீட்டிற்குள்ளேயே குழந்தைகள் தனியாக வாழும் காலகட்டம் இது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இடையே உறவை மேம்படுத்த வேண்டியது குடும்பங்களுக்கு தேவையாக உள்ளது. இந்த உறவு தான் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்குகிறது.
- பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இடையே உறவை மேம்படுத்த
- தேவையான இடத்தில் உங்களுடைய முடிவை மாற்ற
- சுலபமாக உணர்ச்சிகளை கையால.
பாதுகாப்பான உணர்வு
குடும்பத்தை மட்டுமல்லாமல் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது. இருவருக்கும் பாதுகாப்பான உணர்வு ஏற்படும் போது நேர்மறையான செயல்பாடுகளும் தோன்றுகிறது. இரண்டு வயது முதல் 10 வயது வரை சில இடங்களில் அவர்களுக்கு ஏற்றவாறு மாற முடியாது. சிறு குழந்தையில் நடந்துகொள்வது போல வளர வளர அவர்களிடம் அதே மாதிரியாக இருக்க முடியாது. அவ்வப்போது அவர்களுடன் இணங்கிப் போக வேண்டும். தேவையான இடத்தில் உங்களுடைய முடிவை மாற்ற வேண்டும்.
சமூக அறிவு, படிப்பறிவு
அவர்களுக்கு உங்கள் மீதான அன்பை மரியாதையைக் கூட்டும். குழந்தைகள் பிரச்சினைகளை தனியாக புரிந்துகொள்ள கற்பார்கள். பெற்றோர்களுடன் பேசும்போது சமூக அறிவு, படிப்பறிவு மேம்படுகிறது. மனநலம் மற்றும் உணர்ச்சிகளை பக்குவப்படுத்துகிறது.
கடினமான சூழ்நிலை
குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை வளருகின்றன. சுலபமாக உணர்ச்சிகளை கையால்வது எப்படி என்பதை கடினமான சூழ்நிலைகளிலும் கற்றுக் கொள்வார்கள். பெற்றோர்களுடன் நல்ல புரிதலுடன் இருக்கும். குழந்தைகள் பொது வெளியிலும் மற்றவர்களுடனும் தன்மையாக நடந்து கொள்வார்கள்.