செய்திகள்டெக்னாலஜிதமிழகம்

நவீன செயல் புரிந்த ஸ்மார்ட் வொர்க்கர் பட்டதாரி

தொழில்நுட்பத்தை தனது வசதிக்கு ஏற்ப மாற்றி உள்ளார் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன். பொறியியல் பட்டதாரி ஆவார். இந்த வாலிபர் தன் வீட்டில் இயங்கும் மின் விசிறி, கம்ப்யூட்டர் என வீட்டில் உள்ள பொருட்களை தானியங்கி தொழில்நுட்பத்திற்கு மாற்றியுள்ளதாக கூறியுள்ளார்.

  • வீட்டில் உள்ள பொருட்களை தானியங்கி தொழில்நுட்பத்திற்கு மாற்றிய பட்டதாரி.
  • தன் பெயருக்கு ஏற்ப செயலிலும் நவீனத்தை காட்டிய இளைஞர்
  • தன் கண்டுபிடிப்பு மூலமாக தனது லட்சியத்தை சாதித்து காட்டிய இளைஞர்

கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் வேலை

ஜேம்ஸ் பாண்ட் படக்காட்சிகள் மூலம் தனது பன்னிரண்டாம் வயது முதல் ஈர்க்கப்பட்டார். தன் பெயருக்கு ஏற்ப செயலிலும் நவீனத்தை காட்டியுள்ளார். கல்லூரிக்கு செல்லும் முன்பே கம்ப்யூட்டர் பழுது பார்க்கும் வேலையை கற்றறிந்தார். இணையம் மூலமாக தன் வீட்டை ஸ்மார்ட் வீடாக மாற்றும் திறமை பெற்றுள்ளார்.

பணி ஆணைகளை வழங்கிய நிறுவனம்

பட்டதாரியாக இருக்கும் நவீன். லித்தியம் அயன் பேட்டரி மூலம் மின் சுவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கல்லூரிப் பருவத்திலே பல நிறுவனங்கள் நவீனுக்கு பணி ஆணைகளை வழங்கியுள்ளன. இவற்றைப் பொருட்படுத்தாமல் தன் கண்டுபிடிப்பு மூலமாக தனது லட்சியத்தை சாதித்து காட்டியுள்ளார்.

கண்டுபிடிப்பு

பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்த சாதனை கிடைத்ததை மற்ற இளைஞர்களின் கண்டுபிடிப்புகளுக்கு முன் உதாரணமாக பெருமிதம் கொள்கிறார் நவீன். பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றியடைந்த நவீனை மற்ற இளைஞர்களுக்கும், கண்டுபிடிப்பாளர்களுக்கும் முன் உதாரணமாக கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *