மணி பிளான்ட்டின் தன்மை யாரும் அறியா உண்மைகள்
இன்றைய காலகட்டத்தில் ஒரு வீடு என்று இருந்தால் அதில் மணி பிளண்ட் செடி இல்லாத வீடுகளை எடுக்க முடியாது. எங்கு பார்த்தாலும் மணி பிளான் செடிகளை தொங்கம் தொட்டியில் வளர்த்தும் வருகின்றனர்.இதனை இப்பொழுது டெக்கரேஷன் செடியாக அனைவரும் மாற்றி விட்டனர் மணி பிளான்ட் செடியை வீட்டில் வைப்பதால் வாஸ்துபடி மிகவும் நமக்கு நல்லது என்று பலர் நம்பிக்கையுடன் வைத்து வருகின்றனர். சிலரும் இதனை வைத்தால் நம் வீட்டிற்கு பணம் வந்து குவியும் இந்த மணி பிளான் செடியின் சக்தியால் இது பணத்தை ஈர்க்கும் என்று நம்புகின்றனர்.மேலும் சிலர் இச்செடியை வீட்டில் வளர்ப்பதால் நமக்கு பேர், புகழ், பணம் ஆகியவை வந்து சேரும் என்று நம்பிக்கையுடன் வைத்து வருகின்றனர்.
இவ்வாறு பலரும் பலவித காரணங்களுக்காக இந்தச் செடியை வீட்டில் வளர்த்து வருகின்றனர். இதில் சிலர் எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் வெறும் அழகுக்காக மட்டுமே வளர்த்து வருகின்றனர். அவர்களால் எங்கெங்கெல்லாம் மணி பிளான் செடியை வைக்க முடியுமோ அங்கு வைத்து அழகு பார்த்து ரசித்து வருகின்றனர். ஆனால் எத்தனை நம்பிக்கைகளோடு வைக்கும் மணி பிளான்ட் செடியின் உண்மை தன்மை என்னவென்று நாம் இந்த பதிவில் காணலாம்.
நம் முன்னோர்கள் ஒரு விஷயத்தை வீட்டில் வைத்தால் அது பல அறிவியல் நன்மைகளை பெறக்கூடியதாக இருக்கும். அவர்கள் அப்பொழுது அறிவியல் விஞ்ஞானிகளாக இருந்துள்ளனர் என்று கூறினால் மிகையாகாது. ஏனென்றால் அத்தகைய மகத்துவம் வாய்ந்த அறிவியல் உண்மையை இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக மணி பிளான்ட் செடி வனப்பகுதிகளில் அடர்ந்து வளரக்கூடிய செடியாகும். இது காடுகளில் வளரும் பொழுது 50 முதல் 60 அடி நீளம் வரை நடந்து வளரும் நம் வீடுகளில் சிறு தொட்டிகளில் வைப்பதால் சிறிய அளவில் வளர்கிறது.
மணி பிளான்ட் செடியின் உண்மை குணம் என்னவென்றால் இது அசுத்தமான காற்றை தன்னுள் இழுத்து வைத்துக் கொள்கிறது மனிதனுக்கு தேவையான தூய்மையான ஆக்சிஜனை வழி விடுகிறது. இந்த செடியுள்ள இடத்தில் உள்ள காற்றை சுவாசிக்கும் பொழுது நமக்கு உடல் ஆரோக்கியம் ஏற்படும். இந்த அறிவியல் ரகசியத்தை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள் இதனை வாஸ்து செடியாக மாற்றி நம் வீடுகளில் வைத்து உள்ளனர். அதை நம்பிக்கையுடன் இப்பொழுது நாம் அனைவரும் வீடுகளில் வளர்த்து வருகிறோம். ஒரு புறம் அழகுக்காக செடியை வைத்தாலும் நமக்கு தூய்மையான ஆக்சிஜனை கொடுத்து ஆரோக்கியமான உடல் கட்டமைப்பிற்கு உதவுகிறது. இத்தகைய மகத்துவம் வாய்ந்த மணி பிளான்ட் செடியை நீங்களும் உங்கள் வீடுகளில் வளர்த்து உடல் ஆரோக்கியத்துடன் செல்வ வளத்துடன் வளமாக வாழுங்கள்.