ஆன்மிகம்ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறைவாழ்வியல்விழிப்புணர்வு

புல்லுருவியும் அதன் அபார அதிஷ்ட பயன்களும்

புல்லுருவி நமக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும் நன்மையையும் தேடித் தரும் ஒரு மனிதனின் இதனை வைத்து இருந்தால் பல வேறு நன்மைகளும் அவனை தேடி வரும் இத்தகைய மகத்துவம் வாய்ந்த புல்லுருவி என்பது பல பேருக்கும் தெரியாது அது என்ன என்று பார்க்கலாம் மேலும் அவற்றின் பயன்கள் என்ன என்று என்பதையும் பார்க்கலாம்..

ஏதேனும் ஒரு மரத்தில் இருந்து முளைக்கும் மற்றோர் செடி அல்லது கொடி புல்லுருவி எனப்படும். அதாவது தனக்கு வேண்டிய சத்துக்களை அந்த மரத்தில் இருந்து இது எடுத்துக் கொள்ளும்.

ஒவ்வொரு புல்லுருவிக்கு ஒவ்வொரு நாள்,நட்சத்திரம், திதி,பலி பூசைகள் என்று உள்ளது. முழுமையான பூஜைகள் செய்து எடுத்தால்தான் முழுமையாக பலன்கள் உண்டாகும்…. புல்லுருவி மூலிகை தாயத்துகள்

மாமர புல்லுருவி

அவிட்ட நட்சத்திரத்தில் மாமரத்தின் மேல் உள்ள புல்லுருவிக்கு காப்புக்கட்டி பலிகொடுத்து தூபதீபம் கொடுத்து வசிய மந்திரிகள் ஜெபித்து. கொண்டு வந்து வேண்டியவள் வீட்டில் இரப்பில் மந்திரம் ஜெபித்து வைக்க அவள் வசமாவாள் ….என்று வேதம் சொல்லப்படுகிறது…- இழந்த பலன்கள் கிடைக்கும் நல்ல பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மூங்கில் புல்லுருவி பலன்கள்

நமக்கு கெட்டது செய்யும் எந்நேரமும் நம்மை அழிக்க நினைக்கும் எதிரியை இல்லாமல் செய்து அழித்து விடும். எதிரிகள் உங்களை நெருங்கா வண்ணம் உங்களுக்கு பக்கபலமாக இருந்து அவர்களை அடியோடு அழித்துவிடும்.

அரச மர புல்லுருவி பலன்கள்

இழந்த சொத்துகளை திரும்ப பெறலாம். பரம்பரை பரம்பரையாக உங்களுக்கு வராமல் இருந்தால் சொத்துக்கள் உங்களை தேடி வரும்.கோர்ட், கேஸ்கள் சாதகமாகும்.

நெல்லி மர புல்லுருவி பலன்கள்

உங்களுக்கு தேங்காய் நினைத்து உங்களை அழிக்க நினைத்த எதிரொலி உங்களுக்கு செய்த தீங்கை நினைத்து மிகவும் வருந்துவான் உங்களுக்கு செய்தவற்றிற்கு அவன் துன்பத்தை அனுபவிப்பான்.

வெள்ளெருக்கன் புல்லுருவி பலன்கள்

பகையாளி வணங்குவர், வியாபார விருத்தி, உத்தியோகம், தொழில் விருத்தி ஏற்படும். அனைத்திலும் அதிர்ஷ்டம் உண்டாகி தொட்டவை சிறந்து நலமாக நடக்கும் லாபம் ஏற்படும்.

வெண்நாவல் புல்லுருவி பலன்கள்

போட்டி, பந்தயம், லாட்டரி, சூதாட்டம், ஷேர்மார்கெட் வியாபாரம் போன்றவற்றில் எப்போதும் வெற்றி ஏற்படும் நீங்கள் தொட்டது பொன்னாக மாறும் அதிர்ஷ்டம் உண்டாகும்

காட்டு எலுமிச்சை புல்லுருவி பலன்கள்

எந்த பொருளை தொட்டாலும் பலமடங்கு பெருகும், புத்திர சந்தானம் எற்படும்.

ராஜ அரச மர புல்லுருவி பலன்கள்

ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ஏற்படுத்தலாம் நீங்கள் நினைத்தவரை உங்கள் வசம் வசியப்படுத்த இது மிக உதவியாக இருக்கும்.

மலை வாகை புல்லுருவி பலன்கள்

ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும்.

வில்வ புல்லுருவி பலன்கள்

தொழில் வசியம், வியாபார வசியம் மற்றும் கடன் தொல்லை நீங்கி நல்ல தொழில் நடக்கும்.

வன்னிமர புல்லுருவி பலன்கள்

போட்டி, பந்தயம், லாட்டரி, சூதாட்டம், ஷேர்மார்கெட் வியாபாரம் போன்றவற்றில் எப்போதும் வெற்றி.

பவளமல்லி புல்லுருவி பலன்கள்

ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும்.

இலுப்பைபுல்லுருவி பலன்கள்

தொழில் ரீதியாக சத்ருக்கள் இருந்தால் விலகி போவார்கள், போட்டி பொறாமைகள் நீங்கும்.

கருங்காலி புல்லுருவி பலன்கள்

குல தெய்வம் இஷ்ட தெய்வம் வசியமாகும், தேவதா வசியம் ஏற்பட்டு அபூர்வ ஆற்றல் உண்டாகும், இறை சிந்தனை எற்பட்டு தீய சக்தி விலகும்.எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது வன்னிமர புல்லுருவி வன்னிமரம் மாகாலஷ்மி மற்றும் விநாயகர் ஆதலால் தடைகள் மற்றும் லட்சுமி கடாட்சம் பெறும்.

இவ்வாறு புல்லருவியின் பயன்களை சொல்லி போகலாம் ஒரு மனிதன் வாழ்வில் முன்னேற்றம் அடையவும் செல்வ செழிப்புடன் ராஜ வாழ்க்கை வாழவும் இது அவனுக்கு உறுதுணையாக அமையும். புல்லருவியின் பயன்களை பார்த்த நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை செய்து அதன் முழு பயனையும் பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *