செய்திகள்

கொரோனா நிதிக்காக அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு – தெலுங்கானா அரசு

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால்  இந்தியாவில் இதுவரை ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 102 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     கொரோனா வைரஸ் தொற்றினால் அனைத்து மாநிலங்களிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக தெலுங்கானா மாநில அரசு அனைத்து அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.     முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் சம்பளத்தில் 75 சதவீதமும், ஐஎஃப்எஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் சம்பளத்தில் 60 சதவீதமும், மற்ற அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 50 சதவீதமும் குறைக்கப் போவதாக அம்மாநில அரசின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். நன்றி! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *