ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்

Kolukkattai recepie: கொழுக் கொழுக்; வேற லெவல் டேஸ்டில் புது கொழுக்கட்டை

எல்லாருக்குமே ஸ்வீட் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் கொழுகொழுன்னு அப்படியே நாக்குல வச்ச உடனே உள்ள போற ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. இதுவரைக்கும் நம்ம கொழுக்கட்டையில் எவ்வளவோ விதங்கள் பார்த்திருப்போம். ஆனால் நமக்கு பிடித்த ஸ்வீட்டும் நம்ம உடம்புக்கு பிடிச்ச ஆரோக்கியமும் ஒண்ணா சேர்ந்த கொழுகட்டை செஞ்சா எவ்வளவு சூப்பரா இருக்கும். ஆமாங்க நட்ஸ் எல்லாம் சேர்ந்த நட்ஸ் கொழுக்கட்டை எப்படி செய்யலாம்னு இப்ப பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவு

பாதாம்

பிஸ்தா

முந்திரி

திராட்சை

நாட்டு சர்க்கரை

தேங்காய் துருவல்

நெய்

என்னடா இவங்க வெறும் பொருள் மட்டும் தான் சொல்லி இருக்காங்க அளவு சொல்லவில்லை என்று நினைக்காதீங்க. கொழுக்கட்டை உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதுக்கு தகுந்தார் போல நீங்க எல்லாத்தையும் சேர்த்துக்கலாம்.

மேலும் படிக்க : ஸ்பெஷல் ரோஜா ரெசிபி..!!

நட்ஸ் கொழுக்கட்டை செய்முறை

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து கலக்கி கொள்ளவும். பின்பு மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். ஒரு வானலியில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்த பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்பு அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளவும். தேங்காய் பொன்னிறமாக மாறியதும் ஒரு கப் அளவு நாட்டு சர்க்கரை நீங்கள் இனிப்பு பிரியர்களாக இருந்தால் மேலும் சிறிது அதிகமாக நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். அவ்வளவுதான் நம்ம கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம் ரெடியாயிடுச்சு.

மேலும் படிக்க : முந்திரி பட்டர் வைத்து மோச்சா ரெசிபி

பின்பு நாம் செய்து வைத்த கொழுக்கட்டை மாவை தட்டையான வடிவில் தேய்த்துக் கொள்ளவும்.நீங்கள் கைகளில் எண்ணெய் தேய்த்து கைகளிலேயே தட்டையாக செய்து கொள்ளலாம். பின்பு அதனுள் நாம் செய்து வைத்த பூரணம் சிறிதளவு வைத்து மூடிக்கொள்ளவும். அதனை நீங்கள் உங்களுக்கு பிடித்தமான வடிவில் செய்து கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள கொழுக்கட்டை அச்சு வைத்து டிசைன் டிசைனாக கொழுக்கட்டை பிடித்துக் கொள்ளலாம். பின்பு இதனை இட்லி சட்டியில் வைத்து ஒரு பத்து நிமிடம் வேக வைக்கவும். அவ்வளவுதான் சுவையான மிக மிக ஆரோக்கியமான கடவுளுக்கு கூட படைக்கும் நெய் வைத்தியமாக உங்களுக்கு பிடித்த நட்ஸ் கொழுக்கட்டை ரெடி. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவர் அதே போல் நம்ம விநாயகரும் விரும்பி சாப்பிடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *