ஆன்மிகம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

திருவண்ணாமலை தீப தரிசனம் 2023 காண ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறுவது எப்படி ???

கார்த்திகை தீபம் இந்த வருடம் 2023 நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். ஏனெனில் சிவபெருமான் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் மற்றும் பிரம்மன் அவருக்கு அக்னி வடிவமாக காட்சி தந்தமையால் வருடத்தில் ஒருமுறை வரும் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படும் நாளில் சிவன் கோவில்களுக்கு சென்று தீபம் ஏற்றி சிவபெருமானை தரிசித்து வருவது சிறப்பாகும்.

அதனால் வருடம் தோறும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தரும் விழா அன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையில் ஏற்றிய தீபத்திற்கு பின்பு தான் வீடுகளில் உலகம் முழுவதும் மக்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவானது 2023 நவம்பர் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீப தரிசனத்தை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் அவர்கள் எவ்வாறு திருவண்ணாமலை தீப தரிசனம் காண செல்லலாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை பார்க்கலாம்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனம் 2023

திருவண்ணாமலையில் நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது அதே போல் நவம்பர் 26. ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை பரணி தீப தரிசனம் காண ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு பெற்று செல்லும் பக்தர்கள் அதிகாலை 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அதேபோல் மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும் மகா தீபா தரிசனம் காண செல்லும் பக்தர்கள் நவம்பர் 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பரணி தீபம் காண விரும்பும் பக்தர்கள் ரூபாய் 500 செலுத்தி பரணி தீப தரிசன அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் மகா தீப தரிசனம் காண விரும்பும் பக்தர்கள் ரூபாய் 500 மற்றும் ரூபாய் 600 ஆகிய விலைகளில் தரிசன சீட்டு கிடைக்கும், அந்தத் தொகையை செலுத்தி நீங்கள் மகா தீப தரிசனம் காண கட்டண சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

திருவண்ணாமலையில் தீப தரிசனம் காண செல்லும் பக்தர்கள் மேலே குறிப்பிட்ட நேரத்திற்குள் திருவண்ணாமலை கிழக்கு ராஜகோபுரம் வரவேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீப தரிசனம் ஆன்லைனில் கட்டணச் சீட்டு பெறுவது எப்படி?

திருவண்ணாமலை தீப தரிசனம் காண கட்டண அனுமதி சீட்டு ஆன்லைனில் பெற நவம்பர் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் தொடங்குகிறது.

தீப தரிசனம் கட்டண அனுமதி சீட்டுகளை https:// Annamalaiyar.hrce.tn.gov in என்ற திருக்கோவில் நிர்வாக இணையதள பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தீப தரிசன கட்டண அனுமதி சீட்டு பக்தர்கள் கட்டாயம் ஆதார் அட்டை, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தீப தரிசனம் காண கட்டண அனுமதி சீட்டு பதிவு செய்த பின் உங்கள் தொலைபேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி எண் வரும் அந்த ஓடிபி நம்பரை போட்டவுடன் உங்களுக்கான கட்டண அனுமதி சீட்டு உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடும், இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஒரு ஆதார் அட்டை எண்ணிற்கு ஒரு கட்டண அனுமதி சீட்டு மட்டுமே பெற முடியும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *