சன்டே ஸ்பெஷல் கருவாடு ஃபிரை..!!
கருவாட்டில் பல வகைகள் உண்டு. குச்சி கருவாடு, அயிரை மீன் கருவாடு, பால் சுறா கருவாடு, என பல ரகங்கள் பாக்கெட் விற்பனை செய்து கடைகளில் விற்கப்படுகிறது. இதில் உங்களுக்கு விருப்பமான கருவாடை வாங்கி சுடுதண்ணீர் சிறிது நேரம் போட்டு வைத்து இரண்டு முறை பச்சை தண்ணீரில் கழுவி வடித்து எடுத்து வைக்க வேண்டும்.
இதனால் அதில் அதிகப்படியான உப்பு போய் விடும். அதனுடைய ஸ்மல் நீங்கும்.
கருவாடு மசாலா பொரியல்
தேவையான பொருட்கள் : துண்டாக நறுக்கிய கருவாடு 100 கிராம், தக்காளி 2, சின்ன வெங்காயம் 100 கிராம், பூண்டு 10 பல், வரமிளகாய் 10 கிராம், தேங்காய் 2 துண்டு, மஞ்சள் தூள் சிறிதளவு, எண்ணெய் உப்பு தேவையான அளவு.
தாளிக்க : வெந்தயம், சோம்பு, சீரகம் சிறிதளவு.
செய்முறை : கருவாட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகாய், தேங்காய், சோம்பு, உப்பு ஆகியவற்றை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, வெந்தயம், சோம்பு, சீரகம் ஆகியவற்றை தாளித்து வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு அரைத்த விழுதை போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கழுவி போட்டு கெட்டியாக வந்ததும் இறக்க வேண்டும்.
தாளிக்க கூடிய பொருட்களை தாளித்து வெங்காயம், தக்காளி வதக்கவம்போ து கருவாட்டை லேசாக போட்டு வதக்கிக் கொள்ளலாம். கருவாடு எந்த ரகம் என்பதைப் பொறுத்து முதலிலா கடைசியாக சேர்க்க வேண்டுமா என்பதைப் பார்த்து போட வேண்டும். சீக்கிரம் வேக கூடிய கருவாடு கடைசியாக போட்டால் போதுமானது.