சமையல் குறிப்புவாழ்க்கை முறை

சூப்பரான சுவை சேர்க்கும் சமையலுக்கான குறிப்புகள்

தேங்காய், பயத்தம் பருப்பு, தயிர் முதலியன சேர்த்து செய்த உணவாக இருந்தால் சமைத்த உடன் பிரிட்ஜில் வைத்து விட்டால் இரவு வரை கெடாது. காலையிலேயே சாம்பார், குழம்பு, துவையல், தயிர் என ஏதாவது ஒன்றை சுடு சாதத்துடன் கலந்து மதிய சாப்பாட்டுக்கு எடுத்துச்செல்வது வழக்கம்.

ஆனால் மதிய சாப்பிடும் போது இறுகிப்போய் சாப்பாட்டையே வெறுக்க செய்து விடும். சில நேரங்களில் இவற்றைத் தவிர்க்க சாதத்தை சற்று தளர்வாக கலந்து அகலமான பாத்திரத்தில் பத்து நிமிடங்கள் ஆற விட வேண்டும். பிறகு லஞ்ச் பாக்ஸில் எடுத்து வைத்தால் சாப்பிடும் போது கெட்டியாகாமல் இருக்கும்.

மொறுமொறு அடைக்கு அடை மாவை எண்ணெய் தடவிய கல்லில் வட்டமாக ஊற்றி மாவில் ஏழு துளைகள் போடுங்கள். சொட்டு சொட்டாக எண்ணெய் ஊற்றி மூடி வைத்து வேக விட்டால் இருப்பதுடன் தோசைகளும் பிடிக்காமல் இருக்கும்.

வீட்டிலேயே கார்லிக் பிரெட் தயாரிக்க அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட், இரண்டு ஸ்பூன் வெண்ணை சேர்த்து குழைத்து பிரெட் துண்டுகளின் மேல் லேசாக தடவி தோசைக் கல்லில் அல்லது டோஸ்டரில் டோஸ்ட் செய்தால் கார்லிக் பிரட் தயார். இவை எளிமையாக தயாரிக்க முதலில் வெண்ணை தடவிய பிரெட்டை டோஸ்ட் செய்து பிறகு இரண்டாக வெட்டிய ஒரு பல் பூண்டை இதன் மேல் தேய்த்துவிட்டால் கார்லிக் வாசனையுடன் பிரெட் கமகமவென்று இருக்கும்.

ஊறுகாயில் உள்ள காய்கள் தீர்ந்து வெறும் விழுது மட்டும் இருந்தாள். ஒரு பவுலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு அதில் இந்த விழுதை கலந்து ஊறவைத்து தயிர் சாதத்திற்கும் பிரைடு ரைஸ் இருக்கும் சாப்பிட சூப்பர் சைட் டிஷ் ஆக இருக்கும்.

மொத்த விழுதில் வெங்காயத்தை சேர்க்காமல் அவ்வப்போது தேவையான அளவு மட்டும் தயாரித்துக் கொண்டால் தான் பிரஷ்ஷாக இருக்கும். சப்பாத்தி மாவு புதிய சுவையில் வர வெள்ளரிக்காயை தோல் சீவி துருவி எடுத்துக்கொண்டு இத்துடன் கோதுமை மாவு சேர்த்துக் கலந்து தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை. சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து சப்பாத்தி சுடும் போது தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சுடுவதால் சத்தும், சுவையும் அருமையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *