வாழ்க்கை முறை

காட்சிகளுடன் கதைபேசும் புகைப்பட கலைஞர், கதையாளர்!

தம்பியிடம் உதவியொன்று கேட்டேன் யாராவது படைப்பாளி இருக்காங்களா காட்டு என்றேன். பாண்டிச்சேரியில் அருண் என்பவர் இருக்கின்றார். போட்டோகிராபி நல்ல பண்ணுவாரு, கண்ணில் தென்படும் மனித கதையை புகைப்படம் கொண்டு பேசும்வித்தகர் என்றான். பேசிட்டு சொல்லட்டுமா என்றான். சரி என்றேன்.

இது துப்பாக்கி இல்ல, கேமரா,

ஒ புள்ளைய எதும் பன்னல,

நீ பாக்குறத😠பாத்தா என்ன வெத்தல மாதிரி மென்றுவ போல😭

 – புதுச்சேரி அருண்

அடுத்து அவர் எண் கிடைத்தது, நான் தொடர்பு கொண்டேன். தம்பி முன்னமே அவருடைய படைப்பை அனுப்பியிருந்தான். அதிர்ந்து போய்விட்டேன். அடப்பாவமே இப்படியொரு திறன் கொண்டவரா என தம்பியிடம் யார் இவர் என கேட்டப்பொழுது, அவர் ஒரு படைப்பாளி அத்துடன் தனியார் நிறுவனத்தில்  வேலை  செய்கின்றார் என்றான். சரி என பேசினேன் படைப்புகள் தருகின்றேன் என்றார்.

எனக்கு அவர் அனுப்பிய 2 சேம்பல்கள் என்னை சாம்பலாக்கியது. அவ்வளவு நேர்த்தியுடன் எழுதியிருந்தார். அவர் கண்டு ரசித்தப் பார்த்த மனிதர்கள் கதைதான் பேசியிருந்தார். நான் அதனைப் படித்துப் பார்த்து மிரண்டு போய்விட்டேன்.

யாரு சகோதரரே நீங்கள் என்ன செய்கின்றிர்கள் என்றேன். அவர் செய்யும் வேலை விவரம் கூறி போட்டோகிராபி தனக்கு ஒரு ஹாபி என்றார். என் மனதில் “அட பாவி மனிதா, வாழ்வியலை வட்டார வழக்கில் கொண்டுவந்து சிம்பிளா ஹாபி என்கிறயே” என்று நொந்துகொண்டே கேட்டேன், சினிமாவில் எழுதிறிஙகளா என்றேன் இல்லை சினிமாரக்காரர்கள் கேட்டுள்ளனர் என்றார்.

பேஸ்புக்கை தனது படைப்பாற்றல் தளமாக உருவாக்கியுள்ளார். நான் என்னால் முயன்ற சிறு முயற்சியால் ஒரு தளத்தில் சிறிய தொகைக்கு உங்கள கதைகள் எழுதுங்கள் நாளை உங்கள் கதையை எவரேனும் எடுத்துக் கொண்டால் கதையை ஏற்கனவே ஒரு இடத்தில் தாங்கள் பதிந்துள்ளீர் என்பதை தெரிவிக்கலாம் என்று சமாதனப்படுத்தினேன்.

இவரது படைப்புக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் தகும் என்னால் அவ்வளவு தரும் நிலைமை இப்பொழுது இல்லை ஆனால் கில்லித்தரும் நிறுவனத்தில் வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளேன். அவரும் கதைக்களகளில் தனது படைப்பு கொடுத்தார், காட்சிகளில் கொண்ட காதலால் அதனை படம பிடித்து கதையாக்குவதில் வித்தகர்  பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு நிகராக நிக்க வேண்டியவர் அமைதியாக தான் உண்டு, தன் வேலையுண்டு,  தன் போட்டோகிராபியுண்டு என வாழ்ந்து வருகின்றார். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அருண் பாண்டிச்சேரி என்னும் படைபாளருடையது. அவரை வாழ்த்தி அவரது படைப்பை போற்றி தலைவணங்குகிறது நமது சிலேட்குச்சி, நாளை தரணிப் போற்றும் படைப்பாளர் அருண் அவர்களின் படைப்புகளுக்கு இன்று சிரம் தாழ்த்தி தலைவணங்குகின்றது சிலேட்குச்சி இந்தியா.  மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் அருண் பாண்டிச்சேரி அவர்களுக்கு உரிமையுடையப் படைப்பாகும். அவரின் அனுமதியிம பேரில் இதை இங்கு பதிவு செய்து அவரின் படைப்பை போற்றுகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *