வாழ்க்கை முறை

குழந்தைகளின் நலன் காக்கும் சமுதாயம்!

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குதுத் தம்பி

சின்னஞ்சிறுக் கைகள் நம்பி

ஒரு சரித்திரம்  இருக்குது தம்பி

என்ற பாடலை மறைந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிஞர் குழந்தைகளுக்காக எழுதினார். அவருடைய  லட்சிய சொல்லுக்கு இன்று பேரிடி விழுவது போல், நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மனதுக்கு வேதனை அளிக்கின்றது.

புத்தக பைகள் தூக்க வேண்டிய தனது பிஞ்சுக் கரங்களில் சுத்தி. அரிவாள், போன்ற ஆயுதங்கள் தூக்குகிறார்கள் வன்முறை வழியில் அவர்கள் திசைத்  திருப்ப படுகின்றனர், மேலும்  பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்திற்கு பயந்து  மனஅழுத்ததில் வாழும் அவலம், போதைப் பழக்கம்,  தேவையற்ற கருத்துக்களை உள்வாங்கிச் செயல்படுதல் போன்ற அனைத்து அவலங்களும் அவர்களின் மேல் திணிக்கப்படுகின்றன.

நாட்டில் நாளுக்கு நாள் நடந்து வரும் அவலங்கள் இளைஞர்களின் பாதையைத் திசை திருப்பி  எதிர்மறையில் அவர்களின் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றது. விடலைப் பருவத்தில் விவரம் அறியாமலே குரூர உணர்வுகளால் தூண்டப்பட்டுக் கொலை செய்யும் அளவிற்குத்  தூண்டப்படுகின்றார்கள்.

எப்படி வருகின்றது இந்தத் தைரியம் 15 வயது சிறுவர்களுக்குக் கையில் ஆயுதம் ஏந்த கற்றுக் கொடுப்பது யார்,   உயிரைப் கொல்வதற்கு எங்கு கற்க்கிறார்கள் இவர்களுக்குச்  சரியான அறிவுரைகளோ, கற்றல்களோ இல்லை என்பதுதான் வேதனையாகும். சீறார்களுக்குரிய சரியான வழிக்காட்டல்கள்,  தவறுக்குத் தண்டனை கொடுக்கப்படுதல் இல்லை. 

முருங்கை மரத்தை முறித்து  வளர்க்க வேண்டும், பிள்ளைகளை அடித்து வளர்க்க வேண்டும். என்று சொல் வழக்கம் உண்டு. குழந்தைகளின் ஒழுக்கம் கட்டுப்பாடுப் போன்றவற்றினை வீட்டில் இருந்து தொடங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். நீங்கள் டாட்டா பிர்லா வீடானுலும் சரி, விறகு வெட்டும் வேலன் வீட்டு பிள்ளையானாலும் சரி  நல்லொழுக்கம், அறநெறிகள் உங்கள் வீடு, பள்ளி, சமுதாயத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

எந்தளவிற்குக் கண்காணிப்பு கொடுக்கின்றோமோ அந்த அளவிற்குக் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம், அவர்களது  வாழ்க்கை வரை அறநெறிகள் கடைப்பிடித்து வாழ்வார்கள். 

நம் வீட்டு பிள்ளைகளின் வெளி நடவடிக்கை, அவர்கள் வீடு, பள்ளி, வெளியிடம், நண்பர்கள் பழக்க வளக்கம் குறித்துப் பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் யார் வீட்டு பிள்ளைகளாக இருந்தாலும், சமூகத்தில்  யார் அறநெறிகள் தவறி நடந்தாலும் யார் வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற  போக்கு சமூகத்தில் இருக்க வேண்டும். 

இந்திய தேசம் குழந்தை வளர்ப்பில், குடும்ப்ப பிணைப்பில்,  தனி மனித ஒழுக்க முறையில் உயர்ந்து நின்ற தேசம் என்கின்ற நிலைமை தலைகீழாக மாறி வருகின்றது.   வேற்று நாடுகளின் குழந்தை வளர்ப்பை கண்டு வெட்கித்  தலை குணிய வேண்டிய கொடுமையான நிலை இன்று ஏற்பட்டுள்ளது.  இனிமேலாவது விழித்திடுவோம் வீரங்களை விளைவித்திடுவோம் அறம், அன்பு கலந்த பிள்ளைகளை உருவாக்குவோம்.

WRITTEN BY SOCIAL AUTHOR OF SLATEKUCHI: RAJA RAVI PONNUSAMY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *