ரிச்சான சாக்லேட் ரெசிபி பால்ஸ்
அளவான பொருட்களை வைத்து அதிரடியாக செய்யக்கூடிய ரெசிபி இது. சாக்லேட் ஃபட்ஜ் பால்ஸ் ரெசிபி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரிச்சான ரெசிபி இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணலாம்.
சாக்லேட் ஃபட்ஜ் பால்ஸ்
தேவையான பொருட்கள்
கோகோ பவுடர் 25 கிராம், கன்டென்ஸ்டு மில்க் கால் கப், பட்டர் ஒரு ஸ்பூன், உப்பு சிறிது, சாக்லெட் பால்களை உருட்ட தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன் உலர வைத்தது. பருப்பு துகள்கள் சாக்லேட் மற்றும் கலர் ஸ்பிரிங்கில்ஸ்.
செய்முறை விளக்கம்
ஒரு பிளேட்டில் சிறிது வெண்ணையை தடவி வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் கன்டென்ஸ்டு மில்க், வெண்ணெய், உப்பு, கொக்கோ பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து சூடுபடுத்தவும். மிதமான தீயில் கலவையைக் கலந்து பாகும் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். இரண்டு நிமிடத்தில் கலவை கட்டியானதும் வெண்ணை பூசப்பட்ட தட்டில் மேல் ஊற்றவும்.
சிறிது ஆற வைத்து இந்த பிளேடை பிரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து கையில் வெண்ணையை தடவி இந்த மாவை உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டையை ஸ்ப்ரிங்கில்ஸ், பருப்பு துகள்கள் மீது உருட்டி எடுத்தால் சுவையான சாக்லேட் ஃபட்ஜ் பால்ஸ் தயார்.