சமையல் குறிப்புவாழ்க்கை முறை

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இதை அடிக்கடி சாப்பிடுங்க.

ரத்தணுக்களின் அளவு அதிகரிப்பதற்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்த, பாலியல் பிரச்சினைகளுக்கு வாரம் மூன்று முறை பீட்ரூட் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலில் ரத்தத்தை அதிகரிக்க, புதிய ரத்தத்தை உற்பத்தி செய்ய இதை அடிக்கடி சாப்பிடலாம். பீட்ரூட் சட்னி, பொறியல் செய்து சாப்பிடுவோம். வித்தியாசமாக குழம்பு வைப்பது நன்றாக இருக்கும்.

பீட்ரூட் பிடிக்காதவர்களுக்கும் இதன் குழம்பை சாப்பிட்டால் போதுமானது. பீட்ரூட் குழம்பு செய்வது எப்படி வாங்க பார்க்கலாம்.

பீட்ரூட் குழம்பு

தேவையான பொருட்கள்

பீட்ரூட் தோல் உரித்து கட் செய்தது ஒரு கப், தக்காளி அறிந்தது, வெங்காயம் நறுக்கியது 50 கிராம். பச்சை மிளகாய் இரண்டு கீறி வைக்கவும். குழம்பு மிளகாய் பொடி 2 ஸ்பூன். உப்பு, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தேவையான அளவு.

செய்முறை விளக்கம்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு பீட்ரூட், உப்பு, மிளகாய் பொடி சேர்த்து சிறிது நேரம் வதக்கி பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும். பீட்ரூட் குழம்பு சுடு சாதத்திற்கு பரிமாற அருமையாக இருக்கும். தொட்டுக்க மொரு மொரு அப்பளம் வைக்கலாம். அட்டகாசமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *