சமையல் குறிப்புவாழ்க்கை முறை

தக்காளி கெட்சப்..!!

விலை குறைவாக கிடைக்கின்ற நேரங்களில் இந்த தக்காளி கெட்சப் ஐ நாம் எளிதாக வீட்டிலேயே தயாரித்து விடலாம். கடைகளுக்கு சென்று காசு கொடுத்து வாங்காமல், வீட்டில் இருக்கும் பெண்மணிகள் இதை எளிதாக வீட்டிலேயே செய்து வைத்துக் கொள்ளலாம். வீட்டில் செய்வதால் ஆரோக்கியம் இருப்பதுடன் செலவும் மிச்சமாகும்.

தக்காளி கெட்சப்

தேவையான பொருட்கள் : தக்காளி சாறு அரை லிட்டர், நறுக்கிய வெங்காயம் 2 ஸ்பூன், நறுக்கிய வெள்ளைப் பூண்டு ரெண்டு ஸ்பூன், கிராம்பு மூன்று, ஏலக்காய், மிளகு, சீரகம் பொடி செய்த கலவை 2 ஸ்பூன். பட்டை ஒரு துண்டு, மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு, ருசிக்கு ஏற்ப. சர்க்கரை அரை கப், வினிகர் கால் கப்,

செய்முறை : மேலே சொன்னது போல பழச்சாறை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உப்பும், சர்க்கரையும் கலந்து அடுப்பில் வைத்து கொண்டு கிளறி கொண்டு இருக்க வேண்டும்.

நறுக்கிய வெங்காயம், வெள்ளைப் பூண்டு, பொடி செய்த மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சீரகம், மிளகாய் பொடி ஆகியவற்றை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி கொதித்துக் கொண்டிருக்கும் பழச்சாறில் மூழ்கி இருக்கும் படி வைத்து விடுங்கள்.

மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தண்ணீர் போன்று இல்லாமல் உள்ள தன்மையை அடைந்த உடன் மீதமுள்ள உப்பு, சர்க்கரை யையும் வினிகரையும் கலக்க வேண்டும்.

பின்னர் சுத்தம் செய்த பாட்டில்களில் ஊற்றி வைத்து விடலாம். இதுவே தக்காளி கெட்சப் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *