ரியல் தோனி பர்த்டே! ரீல் தோனி ட்ரெய்லர்!
ஹாப்பி பர்த்டே டு மஹேந்திர சிங் தோனி. கிரிக்கெட் வீரர் எண் ஏழிற்கு உருவம் கொடுத்தவர். கிரிக்கெட் பார்க்காதவர்களையும் பார்க்கவைத்த நாயகன். அவரின் புகழ் அடுக்கிக்கொண்டே போகலாம். அவரின் புகழை புகழ்பட நடித்தவர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.
6 ஜூலை 2020 சுஷாந்த் சிங் ராஜ்புட் தன் மறைவிற்கு முன்னாள் நடித்த படமான ‘தில் பெச்சாரா’ ட்ரெய்லர் ரிலீஸானது. இந்தி மொழியில் இயக்கப்பட்ட இந்தப் படம் இயக்குனர் முகேஷ் சாப்ராவின் முதல் படம். சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் சைப் அலிகானை தவிர்த்து அனைவரும் அறிமுக நடிகர்கள். சஞ்சனா சங்கி முன்னணி கதாநாயகியாக இப்படத்தில் அறிமுகமாகுகிறார்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகும் தில் பெச்சாரா படம் நாவல் கதையை ஒட்டி இயக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் புத்தகத்திலிருந்து படமாக்கப்பட்ட ‘காய் போ சே’ படத்தில் அசத்தி இருந்தார். தற்போது வெளிநாட்டு லெவலில் இறங்கியுள்ளார். வெளிநாட்டு எழுத்தாளரான ஜான் கிரீன் எழுதிய ‘தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ நாவலை படமாக்கியுள்ளனர்.
ட்ரெய்லர்
நாவலை படித்தவர்களுக்கும் மட்டுமல்லாமல் டிரெய்லரை பார்த்த அனைவருக்கும் ஆவலை தூண்டியுள்ளது. நாவலின் கதை தெரிந்தவர்களுக்கு ட்ரெய்லர் மிகவும் சுவாரசியமாக அமைந்துள்ளது.
புற்றுநோயும் காதலும் கதைக்களமாக அமர்கிறது. காதல் வாழ்க்கையை சரிபடுத்தி நம்பிக்கை அளிக்கும் என்ற கதைக் கருவை மையமாக கொண்ட படம்.
படத்தின் முக்கியமான ஹைலைட் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ட்ரெய்லரில் வரும் இசை செவிகளுக்கு இனிமையாக அளிக்கிறது.
விமர்சனம்
ட்ரெய்லரில் சுஷாந்த் சிங் ராஜ்புட் கதாபாத்திரம் பேசிய வார்த்தைகள் அனைவருக்கும் மனதில் ஊடுருவி சென்றுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் இந்த ட்ரெய்லரில் ‘Iam a fighter’ (நான் ஒரு போராளி) டயலாக் பேசியுள்ளார். நிஜ வாழ்க்கையிலும் இதனைக் கடைப்பிடித்து இருக்கலாமே என பலர் ஏங்கி உள்ளனர்.
ரிலீஸ்
தில் பெச்சாரா படமும் கொரோனாவால் வெளியிட முடியாமல் அல்லல் பட்டுள்ளது. தற்போது OTTயில் ரிலீஸ் செய்வதாக முடிவு எடுத்த பின்னர் டிரெய்லரை வெளியிட்டு உள்ளனர். அடுத்த இரண்டே வாரங்களில் படம் ரிலீஸ். 24 ஜூலை 2020 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீசாகுகிறது.
அனைவரும் படத்திற்காக காத்திருக்கின்றனர்.