இனிதே முடிந்த ராணாவின் திருமணம்
ராணா தகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் இவர்களின் திருமணம் இன்று கோலாகலமாக மகிழ்ச்சியாக நிறைவடைந்தது. ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோஸில் திருமண நிகழ்ச்சி நெருங்கிய உறவினர்களுடனும் சில நண்பர்களுடனும் நடைபெற்றது. தெலுங்கு மற்றும்
மார்வாரி என இரு சம்பிரதாயத்திலும் இவர்களின் திருமணம் இனிதே நிறைவடைந்தது.
விர்ச்சுவல் ரியாலிட்டி என்று சொல்லப்படும் வி ஆர் மூலமாக பலர் இவர்களின் திருமணத்தை கண்டு களித்தனர். பொதுமக்களுக்காக சில நிமிடங்கள் லைவ் காணொளியும் ஒளிபரப்பப்பட்டது.

மணமகளின் அட்டகாசமான தங்க நிற ஆடையில் ஜொலிக்கும் மிஹீகா பஜாஜ்.
நடிகர் ராம்சரண் தேஜாவுடன் முகமூடி அணிந்தவாறு காலத்திற்குத் தகுந்தாற்போல் போஸ் கொடுத்துள்ளார் ராணா.

பின் ராம்சரன் தன் மனைவியுடனும் ராணா தன் மனைவியுடனும் நால்வரும் ஆக எடுத்துக் கொண்ட புகைப்படம் இதோ.

நடிகர் நானி தன் வீட்டிலிருந்தே விர்சுவல் ரியாலிட்டி மூலமாக ராணாவின் திருமணத்தை காணும் காட்சியை காணுங்கள்.

ராணாவின் திருமணத்திற்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன் ஸ்டைலான முகக் கண்ணாடியுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

இவரு இப்படி போஸ் கொடுக்கறதுக்கு முன்னாடியே கார்ல இருக்கும்போதே புகைப்படப் பிடிப்பாளர்கள் இவரை படம் பிடித்து விட்டனர்.

திருமணம் மாப்பிள்ளை க்ரீம் நிற ஆடை அணிய அதற்குத் தகுந்தாற்போல் திருமணத்திற்கு வந்தவர்கள் அதே நிறத்தில் ஆடை அணிந்து கம்பெனி கொடுத்தனர். நடிகர் நாக சைதன்யா அதே பண்ணா ஆடையுடன் காட்சி அளித்தார்.

கணவன் வந்த பின் மனைவி வராமல் இருப்பாரா! சமந்தா ருத் பிரபு அக்கினி முகம் மட்டும் தென்பட முழு படம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் வாசகர்களாகிய உங்களுக்கு இருப்பது போல் எழுதும் எனக்கும் இருக்கிறது. கணவன் மனைவி இருவருமே புகைப்படத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர் போலிருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரான வெங்கடேஷ் மற்ற ஆண்களின் ஆடைகளில் இருந்து மாறுப்பட்ட நிறத்தில் தனித்துவமாக காட்சியளித்தார்.

நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என கூட்டும் சிறியதாக இருந்தாலும் கூட்டத்தில் அனைவருமே பிரபலமாக இருந்தனர்.