பார்வதியை உயிரோடு எரித்த கொடூரம் – ராஜா ராணி 2
நமது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சீரியலாக ராஜா ராணி 2 உள்ளது மேலும் டி ஆர் பி யில் என்றும் குறையாமல் முதல் இடத்தில் உள்ள சீரியல் ஆக இருப்பது பாரதி கண்ணம்மா இப்படி இரண்டு டாப் ஃபேமஸ் சீரியலும் தற்போது மகா சங்கமமாக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது
தனித்தனியா இருந்தாலே தாறுமாறா நடிப்பீங்க இப்போ ஒன்னா சேர்ந்துட்டா சும்மாவா இருப்பீங்க என்று சொல்லும் அளவிற்கு இரண்டு சீரியலும் ஒன்று சேர்ந்ததும் பல திகில் சம்பவங்களை காட்டி பேய்படத்திற்கே டப் கொடுக்கும் அளவிற்கு நடித்து வருகின்றனர். இதில் ரீசென்டாக ஒரு போலி சாமியார் என்ட்ரி கொடுத்து சிவகாமியின் குடும்பத்தை ஆட்டிப்படைத்து வருகிறார் அவர்கள் பட்ட பாடு பத்தாது என பாரதிகண்ணம்மா குடும்பம் வந்து சாமியாரின் சூழ்ச்சியில் மாட்டிக் கொண்டது. சாமியாரின் டார்ச்சல் இருக்க அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முதலில் சந்தியாவிற்கு இம்சைகளை கொடுத்து வந்த சாமியார் பின்பு சந்தியாவின் மாமியார் சிவகாமியை அம்மனின் நகைகளை திருடிய திருடி என்ற பட்டம் கட்டி அவர்களின் குடும்பத்தையே ஒதுக்கி வைக்கும் அளவிற்கு சூழ்ச்சி செய்தார். மேலும் இந்த சூழ்ச்சியால் பார்வதியின் வாழ்க்கையும் அம்பேல் என்று போனது. இப்படி இருக்க தற்போது சந்தியா பார்வதி கண்ணம்மா ஆகிய மூவரும் தீச்சட்டி எடுத்து ஊரை சுற்றிவர வேண்டும் என்று சாமியார் உத்தரவு போட்டிருந்தார்.இதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று ஊர் மக்கள் எச்சரிக்க மூவரும் அதற்கு ஒப்புக்கொண்டு தீச்சட்டி எடுத்தனர்.
மேலும் படிக்க : முன்னணி இயக்குனர் சங்கர் ட்வீட்
இந்நிலையில் சந்தியாவை அடித்து போட்டுவிட்டு பார்வதியை அவரின் உடமைகளை வைத்து உயிரோடு எரித்து விட்டது போல் சில காட்சிகளை தற்போது காட்டி வருகின்றனர். ராட்சசன் மூவி எல்லாம் தள்ளி நின்று பார்க்கும் அளவிற்கு சீரியலில் டப் கொடுத்து பயங்கரமாக நடித்து வருகின்றனர். பல மர்மங்களை ஒழித்து வைத்திருக்கும் சீரியலாக இப்போது உள்ளது. பார்வதியை உயிரோடு எரித்து விட்டார்களா அல்லது அவளின் உடைமைகளை வைத்து சந்தியாவின் குடும்பத்தோடு விளையாடி வருகிறார்கள் என்ற உண்மை மர்மமாகவே உள்ளது.
மேலும் படிக்க : இன்று வெளியான வி திரைப்படத்தின் விமர்சனம்