Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்தமிழகம்

பங்குனி மாத அமாவாசை

பங்குனி மாதம் மூன்றாம் நாள் விசுவாச புதன்கிழமையான இன்று மாத சிவராத்திரி ஆகும். காலை 9.30 மணி முதல் 10:30 மணி வரை நல்ல நேரம் காலம் இருக்கின்றது. அதேபோன்று மாலை 4:30 முதல் 5 30 வரை நல்ல நேர காலம் இருக்கின்றது. சிலேட்டுக்குச்சி வாசிப்பாளர்கள் தினசரி நல்ல நேரம் கௌரி பஞ்சாங்கம் ராகு காலம் குளிகை பரிகாரம் நாள் சூரிய உதயமாக பார்த்து வருகிறோம் இன்றைய நாள் அமாவாசை நாளாகும்.

பங்குனி அமாவாசை 2026 வழிபாடு நல்ல நேரம் முன்னோர் பூஜை பரிகாரம்

அம்மாவாசை வழிபாடு

பங்குனி மாதம் 4 ஆம் நாள் அம்மாவாசை தினம் ரமலான் 28 ஆம் நாள் நோன்பு கடைபிடிக்கின்றார்கள். இன்றைய நாள் சர்வ அமாவாசையாக இருக்கின்றது. கிருஷ்ணபட்சம் உத்ராயணம் நாளில் முன்னோர்கள் வழிபாடு செய்து நல் ஆசைகளையும் பெற்று வளமுடன் வாழலாம்.

பங்குனி சர்வா அமாவாசையான இன்று பின் பணி காலம் மீன மாதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அம்மாவாசை ஸ்தானம் செய்தல்

அம்மாவாசை நாட்களில் தலைக்கு குளிக்க கூடாது என்று ஒரு தரப்பினரும் அம்மாவாசையில் இறந்தவர்களை நினைத்து குளிக்க வேண்டும் என்று மறு தரப்பினரும் கூறி வருகின்றனர் எது உண்மை என்று புரியவில்லை ஆனால் இவர்களில் வாக்குகளில் ஏதாவது ஒரு உண்மை இருக்க வேண்டும். அல்லது அனுபவங்கள் இருக்க வேண்டும் இதை நாம் ஆழ்ந்து அவரவர்களுக்கேற்ற போல சிந்தித்து செயல்பட வேண்டும்.

அம்மாவாசை குலதெய்வம் வேண்டுதல்

அமாவாசை நாட்களில் கோ பூஜை செய்து நாம் செய்த பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பார்கள். குலதெய்வ வழிபாடு என்பது அம்மாவாசை நாட்களில் மிகவும் முக்கியமானதாகும். அம்மாவாசை நாட்களில் விரதமிருந்து முன்னோர்களுக்கு சாதம் படைத்து வழிபடுவார்கள். மாடுகளுக்கு அகத்திக்கீரை மற்றும் பழங்கள் கோதுமை உணவுகள் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இறைவழிபாடு செய்து இந்நாளில் அன்னதானம் செய்வது சிறப்பு முடியாதவர்கள் கை நிறைய சர்க்கரை அரிசி துவரம் பருப்பு, பாசிப்பயறு கொள்ளு, கோதுமை கலந்த கலவையை காகம் மற்றும் எறும்புகளுக்கு போடலாம் அதுவே புண்ணியத்தை தரும்.

மேலும் படிக்க – திருப்பம் தரும் பங்குனி மாத திருவோண விரதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *