சினிமா

மூக்குத்தி அம்மன் டிரெய்லர் நாளை…

நம்மை அறிவால் தனது பாணியால் ஆட்டிப் படைக்கும் ஆர்.ஜே பாலாஜியின் முக்குத்தி அம்மன் படத்தின் டிரெய்லர் நாளை ரீலிஸ் ஆகின்றது. நயன் தாரா முழுமையாக தனது கதாபாத்திரம் மற்றும் ஒரு பெண்ணாக இருந்து சமூகத்தில் அவள் சந்திக்கும் சவால்கள் அதனை சமாளிக்கும் விதம் ஆகிய கதைகளில் நடிக்கின்றார்.

ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி ஒரு பக்குவமான இயக்குநராக இருக்கின்றார். போக்கிர போக்கில் சமூகத்தின் பல்வேறு நடைமுறை சிக்கல்களை அழகாக அவர் பாணியில் படமாக எடுப்பதில் கில்லியாக இருக்கின்றார்.

முக்குத்தி அம்மன் நகைச்சுவைப் பாணி

அந்த வகையில் பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தில், கவுளுக்கும் மனிதனுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை அவர் இந்த கதையில் நகைச்சுவையாக நம்மை சிந்திக்க வைப்பார் என்று தெரிகின்றது.

மேலும் படிக்க : பட்டையைக் கிளப்பிய பெண்குயின் திரைப்படத்தின் விமர்சனம்

படம் பேசும் கதை

மூக்குத்தி அம்மன் படத்தின் போட்டோ காட்சிகளில் மூக்குத்தி அம்மன் வேடத்தில் விருந்து உணவு சாப்பிடுகின்றார். அம்மன் வாழை இலை நிறைய உணவு இருக்கின்றது ஆனால் ஆர்.ஜேப்பாலாஜியின் இலையில் குறைந்த உணவுப் பதார்த்தம் மட்டுமே இருக்கின்றது. அவர் முகப்பாவனைகள் எனக்கு இவ்ளோதானா என்று முழிக்கின்றார். இதில் எதோ ஆர்.ஜே பாலாஜி சொல்ல வருகின்றார் என்பது படம்மூலம் தெரிகின்றது. சிரிப்புடன் சிந்தனையைத் தூண்டும் வகையில் மூக்குத்தி அம்மன் இருக்கும் என்று தெரிகின்றது.

நாளை டிரெயிலர் ரிலீஸ்

நாளை டிரெயிகர் ரிலீஸ் ஆக இருக்கின்றது, டிரெயிலர் பார்த்தாலே அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பது தெரிய வரும் அந்த அளவுக்கு சுமார்டாக கதையை டிரெயிலர் குழப்பும் வகையில் புரியாத வகையில் கொடுப்பாரா, அல்லது பார்த்ததும் படத்தின் கதை புரிந்துவிடுமா என்பதை உணர முடியும்.

நயன்தாரா அம்மன் கெட்டப்பில் அழகாகக் கட்சிதமாகப் பொருந்தி காட்சித் தருகின்றார். இந்தப் படத்தில் 90, 2 கே கிட்ஸ் வாழ்க்கை முறை எல்லா இழுப்பார் என்று தெரிகின்றது.

மேலும் படிக்க : எஃப். ஐ. ஆர். படத்தில் விஷ்ணு விஷால் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *