மாநில அரசின் சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கில்
மத்தியில் பாராளுமன்ற கூட்டம் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் மாநிலத்திலும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் தொடங்கி இருக்கின்றது. இந்தச் சட்டசபை கூட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு அவர்கள் அனைவருக்கும் முழுமையான பரிசோதனை நடத்தப்பட்டு கூட்டத்தொடர் தொடங்க இருக்கின்றது.
கொரோனா காரணமாக மார்ச் மாத கூட்டத் தொடர் வேகமாக முடிக்கப்பட்டது. அடுத்ததாகச் சமூக இடைவெளியுடன் தலைமைச் செயலகத்தில் சட்டசபை அரங்கம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்த தேர்வு செய்துள்ளனர். சபாநாயகர் அனுமதியுடன் கலைவாணர் அரங்கத்தில் மூன்று நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றது.
இன்று தொடங்கியிருக்கின்ற சட்டசபை கூட்டமானது சபாநாயகர் அனுமதியுடன் கூட்டம் தமிழக அமைச்சர்கள் 6 பேர் மற்றும் எம்எல்ஏக்கள் 34 பேர் போரினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டமன்ற கூட்டத்தில் பங்கு இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு சட்டசபை கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையின்போது அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்கள் நீட் தேர்வு எதிராக அதிகமாகப் பேசுவார்கள் என்று தகவல்கள் கிடைத்திருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்பி வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டசபையை மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிலையில் இதனை 7 நாட்களாக நடத்த வேண்டுமென துரைமுருகன் பேசி இருக்கின்றார்.