செய்திகள்தேசியம்

எல்லை மற்றும் கொரோனா பற்றி மோடி அதிரடி

உலகளவில் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி உலகத்தில் எந்த மூலையில் கிடைத்தாலும் இந்தியாவிற்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தலைநகரம்

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நாட்டில் நடக்கும் பல பிரச்சினைகளுக்கு கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்க நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அக்டோபர் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 18 நாட்கள் நாடாளுமன்றம் செயல்படுகிறது.

நாட்டில் நடக்கும் பிரச்சினைகளான கொரோனா தொற்று எல்லை பிரச்சனை மற்றும் பொருளாதார பிரச்சனைகள் என பல விஷயங்கள் கலந்தாலோசிப்பதோடு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் இருவருக்கும் இரங்கலை இந்த மழைக்கால கூட்டத் தொடரில் தெரிவித்தனர்.

இந்தத் தொடரில் 47 மசோதாக்கள் பற்றி ஆலோசனை செய்ய உள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி பின்வருமாறு கூறியுள்ளார்.

‘மழைக்கால கூட்டத்தொடரை வெற்றிகரமாக நடத்த எம்பிக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்றின் விழிப்புணர்வை அனைவரும் அறிந்துள்ளோம். அதற்கான தகுந்த பாதுகாப்புகளை மக்களவை வருவோர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அறிவுரை கூறியவர் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம் தெரிவிப்பது என்னவென்றால் கொரோனாவின் தடுப்பூசி உலகில் எங்கு கண்டறியப்பட்டாலும் இந்திய மக்களுக்கு விரைவில் பயன்பாட்டிற்கு வரும். அதுவரை மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி மேலும் எல்லையைப் பற்றி கூறுகையில், ராணுவ வீரர்கள் லடாக்கில் பல சோதனைகளை எதிர்கொண்டு சாதனை படைத்து எல்லைகளை பாதுகாத்து வருகின்றனர். இந்திய நாட்டு மக்கள் ஒன்றுபட்டு ராணுவ வீரர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து ஊக்குவித்து அவர்களுக்கு மேலும் வலிமை அளிக்க வேண்டும்.’

மக்களே கொரானாவைப் பற்றி அஞ்சுவதை விடுத்து விழிப்புணர்வு தெரிந்து முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் வாழ்வதே நன்று. பிரதமரின் சொல்லிற்கிணங்க விரைவில் தடுப்பூசி கண்டறியப்படுகையில் நம் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்‌.

மேலும் நாட்டினுள் பத்திரமாக நிம்மதியாக வீட்டினுள் இருக்கும் நாமே இவ்வாறு நிந்திப்பது தவறு. ஏனென்றால் எல்லையில் வாழ்வா சாவா என்று வாழ்க்கையின் விளிம்பில் இருக்கும் ராணுவ வீரர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு பெரிய சல்யூட் அடித்து நாட்டிற்கு நம்முடைய பங்களிப்பை அளிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *