12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை !!!
தமிழகத்தில் சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நவம்பர் 24ம் தேதி இரவு சென்னை உட்பட சில மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்யாமல் சென்று விட்டாலும் வடகிழக்கு பருவமழை தற்பொழுது தமிழகத்தையே ஆட்டிப்படைக்கும் அளவிற்கு பரவலாக அனைத்து இடங்களிலும் கன மழை இடி மின்னலுடன் பெய்து வருகிறது. தற்போது சென்னையே மழை நீரில் மிதக்கும் படகு போல் ஆகிவிட்டது சென்னை மட்டுமல்ல செங்கல்பட்டு ஈரோடு கோவை காஞ்சிபுரம் என பரவலாக சில மாவட்டங்களில் சில தினங்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் 25 ஆம் தேவையான இன்றும் சில மாவட்டங்களில் லேசானது மூலம் கனமழை வரை பெயர் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு என்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை காலை முதலே பெய்து வரும் நிலையில் இன்று 12 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் புதுக்கோட்டை ராமநாதபுரம் திருவாரூர் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 மணி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து இருந்தது அதன்படி அனைத்து பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை வரை பரவலாக பெய்து வருகிறது. திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களிலும் லேசான சாரல் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழையின் ருத்ர தாண்டவம் இன்னும் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் மேலும் சென்னையில் கன மழை பெய்தால் சென்னையில் நிலைமை என்ன ஆகும் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் மழையை ரசித்து கொண்டாடி வருகின்றனர்.
சென்னை ஈரோடு செங்கல்பட்டு போன்ற இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அளவிற்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது சில பகுதிகளில் லேசான சாரல் மட்டுமே உள்ளது.