இரும்பைப் போன்ற பலம் பெற ஹெல்தி கேக்
இரும்புச்சத்து நிறைந்த உணவை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பேரிட்சை பழத்தை தினமும் இரண்டு எடுத்துக் கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. பேரிச்சம்பழம் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பேரிச்சம்பழத்தில் தயாரித்த கேக் கொடுக்கலாம். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து கொடுக்கலாம். இரும்பைப் போன்ற பலம் பெற பேரீச்சம்பழ கேக் சாப்பிடலாம்.
பேரீச்சம்பழ கேக்
தேவையான பொருட்கள்
பேரீச்சம் பழம் ஒரு கப், ஒரு கப் மைதா, சூடு செய்து ஆற வைத்த பால் முக்கால் கப், சர்க்கரை முக்கால் கப், சமையல் சோடா அரை ஸ்பூன், எண்ணெய் அல்லது வெண்ணெய் அரைக் கப். முந்திரி, அக்ரூட் பருப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை விளக்கம்
பேரீச்சம் பழத்தை பாலில் அரை மணி நேரம் ஊறவைத்து, ஊறிய பிறகு சர்க்கரை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த விழுதுடன் எண்ணெய் அல்லது வெண்ணெய் ஏதாவது ஒன்றை சேர்த்து நன்றாக கலக்கிக் விடவும். இன்னொரு பவுலில் மைதா மாவு, சோடா உப்பு சேர்த்து கலந்து பேரீச்சம்பழம் பழக்கூழுடன் இந்த மாவை நன்றாக கலந்து கட்டி விழாமல் சேர்த்து கலக்க வேண்டும்.
கடைசியில் முந்திரி, அக்ரூட் பருப்புகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும். கேக் செய்ய பயன்படுத்தும் ட்ரேயில் சிறிது வெண்ணை தடவி, வர மைதா மாவை தூவி இதன் மேல் இந்தக் கலவையை பரப்பி ஊற்றவும். 350 தில் மைக்ரோவேவ் ஓவனை சூடு செய்து கேக் ட்ரேயை வைத்து 30 நிமிடங்களுக்குப் பிறகு எடுத்து விடவும். ஹெல்தியான இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழ கேக்கை தயாரானவுடன் வெட்டி எடுத்து பரிமாறவும்.