வந்துட்டாருய்யா வந்துட்டாரு! வைகை புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வைகை புயல்!
2017 பிறகு மூன்று வருடங்களாக படம் ஏதும் நடிக்காமல் இருந்தாலும் இவரின் பவுசு குறையவில்லை இணையதளத்தை திறந்தால் இவரின் முகம் பாராமல் வெளிவருவது கடினம்.

இவருக்காக மீம்ஸ்களை பார்க்கிறார்களா மீம்ஸ் கிரியேட்டர்ஸ்காக மீம்ஸ்களை பார்க்கிறார்களா! மீம்ஸ் கிரியேட்டர்ஸ்காக இவர் நடித்தாரா இல்லை இவர் நடிப்பை வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி இருக்காங்களா! ஒண்ணுமே புரியல ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரியுது ரெண்டும் சூப்பர் சிங்கு ஆகுது.
முன்னணி நடிகர்களுக்கு பிறந்தநாளிற்காக உருவாக்கப்படும் காமன் டிஸ்ப்ளே பிக்சர் ஒன்றாகத்தான் இருக்கும் ஆனால் இவருக்கு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே இந்த காமன் டிஸ்ப்ளே பிக்சரை உருவாக்கியுள்ளனர்.

வடிவேலு
12 செப்டம்பர் 1960 இல் மதுரையில் பிறந்து இருக்கிறார் குமரவடிவேல் நடராஜன். இவர் படிக்காத பிரபலமாக திகழ்கிறார். தன் தந்தையின் கண்ணாடித் தொழிலில் பணிபுரிய தொடங்கி தந்தையின் மறைவிற்குப்பின் சகோதரர்களுடன் அந்த பணியை தொடர்ந்தார். அவ்வப்போது மேடை நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கலானார்.

விதி அனைவருக்கும் திட்டம் தீட்டி செயல்படுகிறது. பெண் பார்ப்பதற்காக சென்னை பயணித்த குமாரவடிவேல் நடராஜன் தற்செயலாக ராஜ்கிரனை ரயிலில் சந்திக்க இருவரும் சக பயனாளிகளாக உரையாடினர்.

ராஜ்கிரன் இருவரின் உரையாடலை நினைத்துப் பார்த்து ஆச்சர்யப்பட்டு கஸ்தூரி ராஜாவிடம் தெரிவித்து அவரின் படமான என் ராசாவின் மனசிலேவில் வடிவேலு நடித்தார். குமாரவடிவேல் நடராஜன் வடிவேலுவா மேடையில் மாறினார். அப்பொழுது நகைச்சுவை என்றாலே கவுண்டமணி செந்தில் ஜோடி தான்.

1988 அறிமுகமானவர் 1994 காதலன் படம் மூலம் திரையுலகில் பிரசித்தி அடைந்தார். வருடாந்திரமாக தரமாக பல படங்களை கொடுத்து வந்தார் வடிவேலு. கதாநாயகன் கதாநாயகி ஜோடி என்பது மாறி கதாநாயகன் நகைச்சுவை நாயகன் ஜோடி பல வரவேற்பைப் பெற்றது.
மற்றவர்களைக் கேலி செய்து சிரிக்க வைப்பது பல இடங்களில் பார்க்கலாம். ஆனால் தன்னைத்தானே வருத்திக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது வடிவேல் மட்டும்தான். வார்த்தை விளையாட்டு வார்த்தை ஜாலம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர் வடிவேலு.

வடிவேலு பிரண்ட்ஸ் படத்தில் நேசமணி கதாபாத்திரம் இன்றுவரை பட்டிதொட்டி தோறும் பேசப்படுகிறது. 2019 ‘பிரே ஃபார் நேசமணி’ என்ற ஹேஷ்டாக் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

2017 க்கு பிறகு படம் எதுவும் நடிக்கவுமில்லை வெளிவரவும் இல்லை. தற்போது 2020 படங்கள் மற்றும் வெப்சீரிஸ் நடிப்பதாக செய்திகள் வருகின்றன. கூடிய விரைவில் நகைச்சுவை தலைவரை பெரிய திரையில் காணலாம்.

அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடும் வடிவேலுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள். சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்வீர்களா!!!
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வைகை புயல் வடிவேலு.