சினிமாசின்னத்திரையூடியூபெர்ஸ்

Bakiyalakshmi serial : என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க ; பழனியை புலம்பவிட்ட பாக்யா

சாமானிய பெண்ணின் சாதுர்ய வாழ்க்கையை எடுத்துக்காட்டும் நாடகமாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருவதால் இது பல குடும்பப் பெண்களின் விருப்பமான சீரியலாக மாறிவிட்டது. பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பழனிச்சாமிக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

நம்ம பழனிச்சாமி பாக்யாவை எப்படியாவது வியந்து பார்த்து வைத்து வட வேண்டும் என்று சப்ரைஸ் கொடுப்பதாக நினைத்து டி-ஷர்ட் கூலிங் கிளாஸ் என 10 வயது குறைந்தவர் போல் தன்னை மாற்றிக்கொண்டு ஸ்டைலாக பாக்யாவில் பார்க்க ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அவரைப் பார்த்த அனைவருமே ரொம்ப சூப்பரா இருக்கு என பாராட்டுகின்றனர். ஆனால் பாக்கியம் மட்டும் பழனிச்சாமியை பார்த்து பேசுகிறாரே தவிர அவரின் புது மாற்றத்தை பற்றி ஒரு விமர்சனத்தையும் தரவில்லை. இது பழனிச்சாமிக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

என்ன பாக்யா மேடம் இப்படி பண்ணிட்டீங்க

ராதிகா கர்ப்பமாக இருப்பதைப் பற்றியே யோசித்து வருத்தப்பட்டு கொண்டிருக்கும் பாக்கியாவிற்கு பழனிச்சாமியின் இந்த மாற்றத்தை கவனிக்க நேரமே இல்லை. அவர் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறார் இது எதுவும் தெரியாத பழனி காரில் செல்ல செல்ல என்ன பாக்யா மேடம் இப்படி பண்ணிட்டீங்க ஒரு டைம் ஆவது நல்லா இருக்கு நல்லா இல்ல ஏதாவது ஒன்னு சொல்லி இருக்கலாம் இல்ல என மனுஷன் புலம்பிக்கொண்டே செல்கிறார்.

பார்வையாலே கோபியை எரிக்கும் பாக்யா

வீட்டிற்கு வந்தும் ராதிகா கர்ப்பத்தை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் பாக்யா முன்னாடி நம்ம கோபி எப்பவும் போல வந்து அவரை வெறுப்பேற்றும் விதமாக பேச மேலும் டென்ஷன் ஆன பாக்யா கோபியை விட்டால் பார்வையாலையே எரித்து விடுவார்கள் போல, அப்படி ஒரு கோபத்துடன் பார்க்கிறார் இதை பார்க்க நம்ம கோபி இவை என்ன எப்பவும் இல்லாம இவ்வளவு கோவமா இருக்கா பேசாம நம்ம கம்முனு போயிருவோம் என ஒரே ஓட்டமாக ஓடி விடுகிறார்.

இப்படி மாறி மாறி ஒருவரைப் பற்றி ஒருவர் நினைத்து குழப்பிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி குடும்பத்தில் இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *