செய்திகள்தமிழகம்

பட்டாசு ஆலை வெடி விபத்து:- ஐகோர்ட் கிளை எச்சரிக்கை..!

பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவகாசியில் கடந்தாண்டு நடைபெற்ற பட்டாசு ஆலை விபத்தில் கார்த்தீஸ்வரி, ஹமீதா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரான ராமநாதன், அவர் மனைவி பஞ்சவர்ணம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதனை விசாரித்து நீதிபதிகள், அடிக்கடி பட்டாசு ஆலை விபத்துகள் நடைபெறுகின்றன; இந்த வெடி விபத்துகளில் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றம் கருணை காட்ட முடியாது” என தெரிவித்துள்ளது.

மேலும் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *