சென்னை கிண்டியில் பிரத்யேக வசதிகளுடன் சிகிச்சை மையம்
சென்னை கிண்டியில் பிரத்யேக வசதிகளுடன் சிகிச்சை மையம். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய இந்த வேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டியுள்ளது. பொதுமக்களை ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் கூறினார்கள்.
முழு முடக்கத்தின் பலனாக கொரோனா குறைந்து வருவதாக கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என தெரிவித்தார். ரூபாய் 127 கோடி செலவில் 750 படுக்கைகள் பிரத்யேக வசதிகளுடன் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆறு நடமாடும் எக்ஸ்ரே கருவிகளும், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளும், 28 வெண்டிலேட்டர் இதில் உள்ளன. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
ஆக்சிசன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு 60 படுக்கை வசதிகளை கொண்டது. தேசிய முதியோர் நல மையத்தில் 500 படுக்கைகள் மற்ற விடுதிகளில் 250 படுக்கைகள் இவற்றிற்காக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் இன்னொரு பொது முடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறினார்கள்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் அமைக்கப் பட்டுள்ள அதிநவீன கொரோனா சிகிச்சை மையத்தை மேற்கண்ட வசதிகளுடன் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சுகாதார துறை அமைச்சர் தலைமை செயலாளர், சுகாதார செயலர், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் மற்றுமொரு பொது முடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தெரிவித்தார்.