electionசெய்திகள்தமிழகம்

தமிழ்நாடு சிஎம் மு. க. ஸ்டாலின் அதிரடி

6 ஏப்ரல் வாக்குகள் பதிவு பெற்று 2 மே வாக்குகள் எண்ணப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பெரிய வெற்றியை தழுவினார். முதலமைச்சராக பதவியேற்ற உடன் பல முதன்மையான முடிவுகளை எடுத்து அதற்கான கவர்மென்ட் ஆர்டரை உடனுக்குடன் பாஸ் செய்தார்.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்

7 மே என்று கம்பீரமாக முதலமைச்சராக பதவியேற்ற தருணத்தில் மனைவி திருமதி. துர்கா ஸ்டாலின் மகன் திரு. உதயநிதி ஸ்டாலினும் கண்கலங்கியது நெகிழ்வான தருணமாக அமைந்தது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் கடுமையான பயணம் அனைவரும் அறிந்தது.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

வாக்கியத்திற்கு இனங்க திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் உறுப்பினராக துவங்கி கம்பீரமாக பதவிப் பிரமாணம் ஏற்ற தருணத்தில் அவரும் அவரை சார்ந்தவரும் மகிழ்ச்சியை அடைந்ததோடு தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை பரப்பினார்.

₹2000

வாக்குகளை சேர்க்க அவர் கொடுத்த வாக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய், அதில் முதல்கட்டமாக 2000 ரூபாய் வழங்குவதற்கான கவர்மெண்ட் ஆர்டர் கையொப்பம் இட்டார். வரும் வாரத்தில் அதாவது மே 10 முதல் 16 க்குள் அனைவருக்கும் இந்த பணம் சென்றடைய வேண்டும் என்பதையும் உறுதி படுத்தியுள்ளார். ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு நாளிற்கு 200 அட்டைகள் விகிதம் ஒருவாரத்தில் இந்த செயலை நடத்தி முடிப்பதாக கூறியுள்ளனர்.

இலவச பயணம்

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம். அரசு பேருந்துகளில் வெள்ளை அட்டை பொருத்திய பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற ஆர்டரை பிறப்பித்து அன்றே அதனை செயல்படுத்தியும் காட்டிவிட்டார். வெள்ளை அட்டை உள்ள பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

பால் விலை

பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 விகிதம் குறைக்கப்படுகிறது.

மருத்துவம்

முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவச மருத்துவம். கொரோனா என்னும் பெரும் தொற்றை கைகோர்த்து இணைந்து செயல்படும் வகையில் இலவசம் மருத்துவத்தை வழங்குவதோடு தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.

திருநங்கைகள்

மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை தொடர்ந்து திருநங்கைகளுக்கும் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்ற திட்டத்தையும் மக்களிடையே கொண்டு வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *