உலகமே காலுக்கு அடியில் இந்த வாக்கியம் இன்று பலித்துவிட்டது.
கொரானா வந்தாலும் வந்தது நம்முடைய அன்றாட வாழ்வியல் நடைமுறை அப்படியே தலைகீழாக மாறி வருகிறது. வாழ்க்கையே வழி மாறிப்போகும் பொழுதுதான் நமக்கு வலிப்புரிகின்றது.
குழந்தைகள் மொபைல் போனை பார்த்தால் மொபைல் போனை பார்த்தா கண்கள் கெட்டுவிடும் என்று கூறிக் கொண்டு வந்த நாம் ” ஐயோ கிளாஸ் ஆரம்பிச்சுட்டாக மொபைல் போனை எடுறா!! கம்ப்யூட்டர் எடுத்து பாருடா!! ” என்று கூறி வருகிறோம்.
வணக்கம் சொன்னால் பத்தாம் பசலி நாகரிகம் தெரியாதவன் என்று வசைப்பாடி, வணக்கம் பரவாயில்லைல என்ன யோசிக்கின்றோம். சாதாரணமாகவே கைகுலுக்கி அடுத்து பேசிக் கொண்டிருந்த நாம் இப்போது ஒரு அடி தள்ளி நின்று பேசுகிறோம். செம இல்லைங்க, ஹச் என்று தும்மினால் தீர்க்காயுசு!! பூரண ஆயுசு!! என்று கூறி வந்தவர்கள் இப்போது தும்மல் சத்தம் கேட்ட மாத்திரத்தில் சிதறி ஓடுகிறார்கள்.
அதுமட்டுமா அலுவலகம் சென்று வரும் பொழுது ஒரே மரண பயம் நம்மை ஆட்கொண்டு விடுகிறது. இதற்கு மேலே நொடிக்கு ஒருமுறை பரபரப்பு காட்டுகிறேன் பேர்வழி என்று நம் தலையில் ஆணி வைத்து அடிக்கும் தொலைக்காட்சி செய்திகள் வேறு. இதோ இங்கு, இப்படி தலைப்பு செய்திகள் தலையில் இடியை இறக்குகின்றன.
ஆனால் இதற்கெல்லாம் பயந்து நாம் அப்படியே இருந்துவிட முடியுமா என்ன? அதுதான் நடக்காத விஷயமாயிற்றே.
அதனால் நாம் ஒரு சில புதிய நடைமுறைகளை பழகிக் கொண்டு தான் ஆக வேண்டும் வேறு வழியே கிடையாது என்பது மட்டும் நல்ல புரிகின்றது.
எதையும் புதிதாக பழகவில்லை என்கிறீர்கள் எல்லாமே நமக்கு ஆரம்பத்தில் புதுசுதான் வீடுகளில் போய் கால் பேசிக்கொண்டிருந்த நாம் பிறகு மொபைல் பேசியில் பாயந்து பாயந்து ரீசார்ஜ் செய்து பேசிக்கொண்டிருந்த நாம் இப்போது வீடியோ கால் பேச வருகிறோம் எல்லாமே ஆரம்பத்தில் புதுசுதான் அதுக்கப்புறம் வடிவேல் சொல்வது போல்தான் “பழகி” விடுகிறது.
காலுக்கடியில் உலகம்:
லிப்டுக்குள் சென்றால் கைகளால் தானே பட்டன்களை அழுத்தி வந்தோம்…
ஆனால் இன்னும் சற்றுக் காலத்தில் பொத்தானை கால்களில் தான் அமுக்கப் போகிறோம்…
ஆம் கைகளால் தொட்டால்தான் கொரொனா வந்து விடுமாம்!!
இதற்கான ஆயத்தப் பணிகள் சென்னை மெட்ரோ ரயில் வளாகத்தில் துவங்கிவிட்டன…! அனைத்து லிஃப்ட் களிலும் கைமுறை ஒழிந்து , கால் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.
இது போன்ற பல விஷயங்கள் இனிமேல் காலை சார்ந்துதான் இருக்க போகிறது.
கையை கழுவ ( சனிடைசர்களை) இப்போதே காலால் தான் எடுத்து வருகிறோம் கையால் தொடுவது இல்லை.
முன்பு குப்பைத் தொட்டிகளைக் கால்களால் தான் பயன்படுத்த துவங்கினோம். பிறகு அந்த முறை சரியாக செயல்படாததால் அதை கைவிட்டு விட்டோம்.
ஆனால் இன்று மீண்டும் அந்த முறை பெரிய அளவில் தலைதூக்கத் தொடங்கி விட்டது.
சிறிது நாட்களில் கதவுகளைத் கூட கால்களால் தள்ளி திறக்கும்படி , எடுக்கும்படி திட்டங்கள் உருவாகி வருகிறது.
“உலகம் நம் காலடியில்” என்று முன்னோர்கள் கூறிய முது மொழி எப்படியெல்லாம் பலிக்கிறது பார்த்தீர்களா!!