அன்பும் உறவும்வாழ்க்கை முறை

உங்களுக்கு நீங்களே ஹீரோ தான்.!

தினமும் அதிகாலையிலேயே எழுந்திருக்கும் பழக்கத்தை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். உற்சாகமாக வைத்துக் கொள்ள உடல் நலன் ஒரு பங்கு வகித்தாலும், அதற்கு முக்கிய காரணிகளாக நம்மைச் சுற்றியிருக்கும் குடும்ப உறுப்பினர்களும் ஒரு காரணம் என்பதை பல சமயங்களில் நாம் மறந்து விடுகிறோம்.

குடும்ப உறவு

குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும், வைத்துக் கொள்வது தான் இங்கே முக்கியம். இதை குடும்பத்தினரை மட்டுமல்லாமல், நம்மையும் நம்மைச் சுற்றி உள்ள அனைவரையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும். இதற்காக சில வழிகளை கடைபிடித்தாலே போதுமானதாக இருக்கும்.

குடும்பத்துக்கு என நீங்கள் ஒதுக்கும் நேரத்தை சிறப்பான நேரமாக பயன்படுத்துங்க. எவ்வளவு நேரம் செலவிடுறோம் அப்படிங்கறது முக்கியமில்லை. எப்படி நேரத்தை செலவிடுகிறோம் என்பதே முக்கியமானதாகும். நீங்கள் செலவிடும் நேரம் எப்போதும் நினைவில் நிற்கும்.

இனிமையான தருணங்கள்

இனிமையான தருணங்கள் ஆகவும் ஆரோக்கியமானவர்களாகவும் இருக்கட்டும். நம் வீட்டு வேலையை செய்வது நமக்கு என்ன தயக்கம் என்ற மனநிலை தேவை. குறைந்த பட்சம் சமயல் செய்யா விட்டாலும், சமையலுக்கு தேவையான சிறு சிறு உதவிகளை செய்து கொடுக்கலாம்.

வார இறுதியில் சமைப்பது, வீட்டை சுத்தமாக அது போன்ற வேலைகளை பகிர்ந்து கொள்வது கணவன், மனைவிக்கு இடையே ஒரு நல்ல எண்ணத்தையும், அன்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும். வாரம் ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ, சுற்றுலா சென்று வருவதை பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இது உங்கள் குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை உருவாக்கும். பண்டிகை நாட்கள் பிறந்த நாள், திருமண நாள் போன்ற வீட்டு விசேஷங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். எல்லா வீட்டு வேலைகளில் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று இல்லை.

சமைப்பது, துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் எந்த வித தவறும் இல்லை. எனக்கும் ஒரு விதி இருக்கிறது. அதை விட்டு விட மாட்டேன் என்று சொல்வது எல்லாம் பேச செல்லுபடி ஆகாது. கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். வேலை, வேலை என்று இருக்காமல், தினமும் ஒரு வேளை உணவாவது குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ணலாம்.

குழந்தைகளுக்கு உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்க விட வேண்டும். கீழே சிந்தாமல் பொறுமையாக சாப்பிட வேண்டும். தரையில் விழும் உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உரையாடல்

நான் சொல்வது தான் சரி என்று இருக்கக் கூடாது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அனைவரின் விருப்பங்களையும், ரசனைகளையும், சுவையையும் நன்கு அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உரையாடல் மற்றவர்களுக்கு இடம் தரலாம்.

நேரத்தை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். குழந்தைகள் முதியோர் என அனைவரும் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். உரையாடலில் நேர்மறையான கருத்துக்கள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டாக அமர்ந்து பேசும் போதும் கலகலப்பான நகைச்சுவைகள் நிறைந்த உரையாடல்களை உருவாக்குங்கள்.

தினமும் அதிகாலை எழுந்து அன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தலாம். இது மிகவும் உதவி புரியும். உடற்பயிற்சி, யோகா மூச்சுப்பயிற்சி, தியானம் போன்ற ஆரோக்கிய நடைமுறைகளையும் வலுப்படுத்தும். இது போன்ற நடை முறைகளை கடைபிடித்தாலே குடும்பம் ஒரு கதம்பம் என்பது உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *