பெண்களை ஸ்லிம்மாக காட்டும் ஆடை ரகங்கள்
பருமனான உடலை ஒல்லியாக காட்ட வேண்டுமா? உடுத்தும் உடையில் கொஞ்சம் கவனம் செலுத்த என்ன மாதிரியான உடைகளை தேர்ந்தெடுக்கலாம். இப்படி தேர்ந்தெடுப்பதால் ஒல்லியாக காட்ட முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டீர்களா? ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள் கூறும் சில டிப்ஸ்கள் வாங்க பார்க்கலாம்.
- உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் டயட்டை ஃபாலோ செய்தால் போதாது.
- மற்ற பெண்களை விட அழகில் கொஞ்சம் தூக்கலாக தெரிய.
- உடுத்தும் உடையில் என்ன மாதிரியான உடைகளை தேர்ந்தெடுக்கலாம்.
டயட் ஃபாலோ போதாது
உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் டயட்டை ஃபாலோ செய்தால் போதாது. கொஞ்சம் ஸ்டைலையும் மாற்றி முயற்சிக்க வேண்டும். டயட் ஃபாலோ செய்வதால் பருமனை குறைப்பது பார்ப்பவர்களுக்கு சிக்கென தெரியும் என்று நினைக்காதீர்கள். மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. இறுக்கமான ஆடைகள் உங்கள் உடலில் அதிகமாக உள்ள சதைப்பகுதியை மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்துவிடும்.
ஸ்லிம் ஃபிட் ஆடை
சரியான அளவில் ஸ்லிம் ஃபிட் ஆடைகளை அணிய வேண்டும். உயரமான ஹீல்ஸ் அணியும் போது உங்கள் உடலை இன்னும் கொஞ்சம் ஒல்லியாக காட்ட முடியும். சரியான ஹீல்ஸ் அணிவது அவசியம். ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ் அணியலாம். ஜீன்ஸ் தகுந்தபடி ஹீல்ஸ் இருக்க வேண்டும்.
உடல்வாகுக்கு பொருத்தமாக
மற்றவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு உங்கள் உள்ளாடைகளைத் தேர்வு செய்யக்கூடாது. உள்ளாடைகளை வாங்கும்போது உடல்வாகுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் முதுகுப்பகுதியில் சதைகள் வெளியே தெரியும். டார்க் ரெட், பிளாக் போன்ற நிறங்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். கோடு போட்ட டிசைன்கள் கொண்ட ஆடையாக இருந்தால் செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை உடுத்த வேண்டும். இவை ஒல்லியாக காட்டும்.
உடல் கொஞ்சம் ஒல்லியாக
கிடைமட்டமாக கோடுகள் உள்ள ஆடையாக இருந்தால் உங்கள் எடையை இன்னும் கொஞ்சம் கூடுதலாக காட்டும். இளம் பெண்கள் மிடி அணிபவராக இருந்தால் மற்ற பெண்களை விட அழகில் கொஞ்சம் தூக்கலாக தெரிவார்கள். கொஞ்சம் பருமனாக இருந்தாலும் மிடியை தேர்ந்தெடுக்கலாம். மிடி முழு நீளமானதாக இருக்கக்கூடாது. முழங்கை மறைக்கும் அளவுக்கு பாதி அளவுக்கு இருக்கும் மிடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் இவர்கள் உடல் கொஞ்சம் ஒல்லியாக தெரியும்.