ஃபேசன்வாழ்க்கை முறை

பெண்களின் பொக்கிஷமாக இருக்கும் பாரம்பரிய ஆடை ரகங்கள்

பாரம்பரியமாக முன்னோர்கள் வழியில் அணிந்த ஒரு ஆடை புடவை. பெண்கள் புடவை அணிவதால் கர்ப்பப்பைக்கு நல்லது. தினமும் புதிது புதிதாக உருவாகும் ரகங்கள் எளிமையான விலையில் தொடங்கி உயர்ரக விலை வரை பல்வேறு ரகங்கள் கொண்டது புடவை. பெண்களுக்கு புடவை ஒரு பொக்கிஷம்.

  • பெண்கள் புடவை அணிவதால் கர்ப்பப்பைக்கு நல்லது.
  • பெண்களுக்கு புடவை ஒரு பொக்கிஷம்.
  • புடவையில் என்னென்ன ரகங்கள் இருக்கிறது.

புடவை கட்டுவதால் கர்ப்பப்பைக்கு நல்லது

இந்தக் காலத்துப் பெண்கள் லெகின்ஸ், சுடிதார் என போட்டுக்கொள்கிறார்கள். கர்ப்பப்பை பிரச்சனை தொடங்கியது சுடிதார், லெக்கின்ஸ் போட்ட பிறகு தான் என்று சொல்லலாம். புடவை கட்டுவதால் கர்ப்பப்பைக்கு நல்லது என்பதால் தான் அந்தக் காலத்தில் பெண்கள் புடவைகளை மட்டுமே அணிந்து வந்துள்ளனர். புடவையில் என்னென்ன ரகங்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

பெங்கால் காட்டன் சிம்பிளான பார்டரும்

பெரும்பாலும் காட்டன் புடவைகள் எந்த வண்ணமாக இருந்தாலும் அணிபவரை பிரகாசிக்க வைக்கும். காட்டன் சேலையில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் சிம்பிளான பார்டரும், மெல்லிய நெசவில் எளிய விலைகொடுத்து வாங்க கூடியது பெங்கால் காட்டன். இது கட்டினால் அழகாக இருக்கும்.

சில்க் காட்டன் ஜரிகை பார்டர்

பெயரைச் சொன்னாலே சிலிர்க்கும் அளவிற்கு தன்மை அற்புதமானது சில்க் காட்டன். பட்டுப் புடவைகளுக்கு பதிலாக விசேஷங்களுக்கு இதை அணிந்து செல்லலாம். மெல்லிய ஜரிகை பார்டர். பல வடிவங்கள் உள்ளடக்கிய புடவை தனது தன்மையை விட்டுக்கொடுக்காத புடவை சில்க் காட்டன்.

கம்ப்ச்சாஸ் காட்டன் பிரபலமான டிசைன்ஸ்

செக் டிசைன்களுக்கு பெயர் போனது கம்ப்ச்சாஸ் காட்டன். மினி செக்கர்ஸ், மல்டிபிள் செக்கர்ஸ் என பலவகை இருந்தாலும் அணிபவர்கள் இளமையாக காட்டுவது இதன் சிறப்பு. பிளாக் அண்ட் வைட் முதல் டிஜிட்டல் வரை சாயம் போகாத பிரபலமான டிசைன்ஸ் இது.

கலாஷேத்ரா காட்டன் பவர்லூம் புடவை

ஆன்லைனில் பவர்லூம் புடவைகளை கலாஷேத்ரா காட்டன் என விற்கின்றனர். சென்னையில் இந்த புடவையை கடைகளுக்கு சென்று நேரடியாக வாங்கலாம். குறைந்த விலையில் சிறப்பான விஷயங்கள் என்னவென்றால் பெரிய பிராண்டட் புடவைகளின் லுக் மற்றும் தரம் கோடை காலத்துக்கு தேவையான புடவை இதுதான். பளிச் நிறங்கள், லுக்குகள் என்று சென்னையில் இப்போதைய ட்ரெண்ட் இந்த புடவை தான்.

மங்களகிரி காட்டனுக்கு மவுசு பெண்களின் பெருமை

பெண்களின் பெருமை இந்த புடவை. பருத்தி மெல்லிய புடவையாக நெய்து பலவித வண்ணங்களை அமைத்து சிம்பிள் பார்டர்கள் கொடுத்திருப்பர். ஒரே நிற வண்ணத்தில் புடவையும் அதே நிறத்தில் ஜரிகை கொண்டு முடித்து இருப்பார்கள். மங்களகிரி காட்டனுக்கு எப்போதுமே மவுசு அதிகமாக இருக்கிறது.

காஞ்சி காட்டனில் டிசைன்கள் ஏராளம்

பெரிய மயில், இந்திய கோபுரங்கள் என இதன் டிசைன்கள் ஏராளமாக இருக்கும். காஞ்சி காட்டனில் அணியும் போது அழகாக காட்டும். பெண்ணின் மனதை காஞ்சிபுரத்தில் ஃபேமஸ் என்ப தால் காஞ்சி காட்டன் என சுருங்க பெற்றது. பார்டர்கள் பெரியதாக இருப்பதால் அழுத்தமான நிறங்களை ஜரிகை கொண்டுள்ளதால் பார்ப்பவர்களை கவரும்.

பருத்தி உற்பத்தியில் கோவை காட்டன்

உலகெங்கும் உலாவரும் கோவையில் மட்டுமல்லாமல் ஆன்லைனில் கூட வாங்கிவிட முடியும் கோவை காட்டன். காட்டன் என்றாலே காட்டன் சிட்டியை விடமுடியாது. பருத்தி உற்பத்தியில் பெயர்போன கோவை புடவைதான் கோவை காட்டன். இவை கோவையில் தயாரித்து வருவதால் இப்பெயர் பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *