போட்டி தேர்வுகளுக்கு தேவையான அன்றாட நிகழ்வுகள் -13.10.2026
புதிய ஆளுநர்கள் நியமனம்
ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் பல மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். (இதற்கு முன்பு இவர் கேரள மாநில ஆளுநராக இருந்தார்).
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- தமிழ்நாடு – ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
- கேரளம் -ஓம் பிரகாஷ் மாத்தூர்
- கர்நாடகா-டாக்டர் சுதா யாதவ்
- ஒடிசா-பிரஜ் மோகன் ராம்
- உத்தரகண்ட்-டாக்டர் தல் சிங் பிசென்
- சிக்கிம்-துஷ்யந்த் கவுதம்
டெல்லி சொத்து உரிமை சட்டம்
டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு விரைவாக சொத்து உரிமைகளை வழங்குவதற்காக, மத்திய அரசு 65 கோடி ரூபாய் மதிப்பிலான ‘திஷ்டி’ (DRISHTI) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் (Unauthorised Colonies) வசிக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு சட்டப்பூர்வமான சொத்து உரிமைகள் மற்றும் பாதுகாப்பு வழங்குவதை துரிதப்படுத்துவதாகும்
மத்திய அரசு 65 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள அனைத்து 13 மாவட்டங்களிலும் PM-UDAY (प्रधानमंत्री अनधिकृत कॉलोनियों में आवास अधिकार योजना) செல்கள் அமைக்கப்படும்.நில ஆவணங்களை விரைவாக வழங்குவதற்காக ஜிஐஎஸ் (GIS) மற்றும் புவிசார் தொழில்நுட்பம் (Geospatial Technology) மற்றும் நவீன ட்ரோன் சர்வே போன்ற டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும்.இதன் மூலம் சர்வே செய்தல், மேப்பிங் மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் மிகவும் வெளிப்படைத்தன்மையாகவும், காலதாமதமின்றி விரைவாகவும் நடைபெறும்
புதிய மருத்துவ விதிமுறைகள்
புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை (Trade Margin) அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) 30 சதவீதமாக கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளின் அதிகப்படியான விலை மற்றும் லாபmargins குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் மற்றும் தீவிரக் கண்காணிப்புக்குப் பிறகு, மத்திய அரசு இந்த முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் அட்டவணைப்படுத்தப்படாத (Non-scheduled) மருந்துகளின் வர்த்தக லாப வரம்பு அதிகபட்ச சில்லறை விலையில் (MRP) 30 சதவீதமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது.
- இப்புதிய விதிமுறையின் மூலம் புற்றுநோய் மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.
- இதன் மூலம் நாட்டின் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ₹2,500 கோடி வரை சேமிப்பு ஏற்படும் என்றும், அவர்கள் மருந்தகங்களில் தாங்களாகவே செலவிடும் தொகை பெருமளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
- பிராண்டட் மற்றும் ஜெனரிக்கல் என அனைத்து வகையான புற்றுநோய் மருந்துகளுக்கும் இந்த லாப வரம்புக் கட்டுப்பாடு பொருந்தும்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2026
இவ்வாண்டிற்கான பொருளாதார நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்களான ராபர்ட் இ. Michael Woodford) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மந்தநிலை மற்றும் வளர்ச்சியை ஸ்திரப்படுத்த உதவும் மேக்ரோ எகனாமிக் மாதிரிகளை உருவாக்கியதற்காக இவர்களுக்கு இப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
