போட்டி தேர்வுகளின் கேள்விகளுக்கான பதில்கள் இங்கே படித்து சாதிக்கவும்!
சிலேட் குச்சி உருவாக்கிய கேள்விகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான மாதிரி வினாக்களுக்கான விடைகள் இங்கு கொடுத்துள்ளோம்.
1.சிந்து சமவெளி நாகரிகம் சால்கோலித்திக் நாகரிகம் என்று அழைக்கப்பட்டது ஏன்
விடை:
1.அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட கல் செம்பு கருவிகளை கொண்டு அவ்வாறு அழைக்கப்பட்டது.
விளக்கம்: கல் செம்பு தொல்பொருள் ஆய்வில் கிடைத்ததால் அவ்வாறு அழைக்கப்பட்டது. பின்னர் ஹரப்பா நாகரிகம் மற்றும் சிந்து சம்வெளி நாகரிகம் எனவும் அழைக்கப்பட்டன. சிந்து சம்வெளி நாகரிகம் மெசபடோமியா மற்றும் எகிபது நாகரிகங்களுக்கு நிகரானது செல்வ செழிப்புடன் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது என 1920களின் அகழ்வாய்வில் தெரியவந்தது.
2.ஹரப்பா நகரம் தற்பொழுது எந்த பகுதியில் உள்ளது?விடை: 2.பஞ்சாப் மாண்ட்கோமாரி மாவட்டம்
விளக்கம்:ஹரப்பா நாகரிகம் 1921இல் கண்டுபிடிக்கப் பட்டது. சர். ஜான் மார்ஷல் என்பவர் இதனை கண்டு பிடித்தார்.இங்கு பழைய செங்கற்கள் பயன்படுத்தப் பட்டத்தை அகழ்வாய்வில் கண்டுபிடித்தனர். ஹரப்பாவி லிருந்து எடுத்துவரப்பட்ட கற்கள் ரயில்பாலம் செய்ய பயன்படுத்தினார்கள்.
3.இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எத்தனை சிறப்பு நிதிகள் செயல்படுத்தலாம்.
விடை: 3.மூன்று
விளக்கம்:இந்திய தொகுப்பு நிதி, இந்திய பொதுகணக்கு நிதி, இந்திய நடப்புநிதி என மூன்று நிதிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. இந்திய தொகுப்புநிதி சட்டவிதி 266கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இந்திய தொகுப்பு நிதியில் இடம்பெறாத பணம் பொதுக்கணக்கில் அடங்கும். இந்திய நடப்புநிதி 1950 நடப்புநிதி சட்டப்படி நிர்வகிக்கப்படுகின்றது. இந்த நிதிக்கு குடியரசு தலைவர் பொறுப்பாவார்.
4.உச்சநீதிமன்றத்தின் இருப்பிடம் ஏன் டெல்லியை இருப்பிடமாக கொண்டது?
விடை:
1.அரசியலமைப்பின் சட்டத்துடன் இருப்பிடம் டெல்லியை தலைமை இடமாக கொண்டுள்ளதால் உச்சநீதிமன்றமும் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
விளக்கம்: இந்திய அரசியலமைப்பு சட்டமும் டெல்லியை இருப்பிடமக கொண்டதால் உச்சநீதிமன்றத்தையும் டெல்லியில் அமைத்தனர். எனினும் தலைமை நீதிபதி வேறு இடத்தை உச்சநீதிமன்றத்தை இருப்பிடமாகத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்றுள்னர். தலைமையிடத்தை மாற்றுமுன் குடியரசுதலைவரின் ஒப்புதலை பெற வேண்டும்.
5.ஆங்கிலேய அரசால் சென்னை சட்டமன்றத்தில் நியமிக்கப்பட்ட பெற்ற முதல் பெண்மணி
விடை: 1.முத்துலெட்சுமிவிளக்கம்: முத்துலெட்சுமி 1886இல் புதுகோட்டையில் பிறந்தார். சிறந்த படிப்பறிவு கொண்டவர் 1912 இல் மருத்துவர் பட்டம் பெற்றவர். மகளிருக்கு வாக்குரிமை சொத்துரிமை அளிக்க வேண்டும் என கேட்டவர்.
6.கண்ணுக்கு புலப்படும் புதன் வெள்ளி கோள்கள் எப்பொழுது புலப்படும்?
விடை: 2. புதன், வெள்ளி கோள்கள் சூரிய உதயம் முன்பும் காலையிலும் மறைந்த பின்பு மாலையிலும் புலப்படும்.
விளக்கம்: காலையில் சூரிய உதயத்திற்கும் சற்று முன்பு புலப்படும் விடிவெள்ளி என அழைக்கப்படுகின்றன. புதன், வெள்ளி, வியாழன், சனி, ஆகிய ஐந்து கோள்கள் மட்டுமே பார்க்க முடியும். மேலும் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் கோள்கள் நான்கும் திடகோள்கள் என அழைக்கப்படுகின்றன.
7.விக்ரம்சீலா பல்கலைகழகத்தை நிறுவியவர் யார்?விடை: 1.தரும பாலர்
விளக்கம்: இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை ஆட்சி செய்தவர்கள் பாலர் இனத்தவர்கள் ஆவார்கள். பாலர் இனத்தில் கோபாலரை அடுத்து தருமபாலர் மன்னரானார். வட இந்தியா முழுவதும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார், இவரே விக்ரமசீலா பல்கலைகழகத்தை நிறுவினார் நாளாலந்தா பல்கலைகழகத்தை புதுப்பித்தார்.
8.பரப்பளவில் இரண்டாவது பெரியகண்டம் எது?விடை: 3.ஆசியா
விளக்கம்:நாம் வாழும் ஆசிய கண்டத்தில் தெற்கு ரயில் பகுதியில் அமைந்துள்ளது. ஏழு கண்டங்களில் மிகபெரியது. ஆசியா உலகில் உயரமான இமயமலைத் தொடர் ஆசிய கண்டத்தில் உள்ளது.
9.நரம்பு மண்டலம் என்பது என்ன?
விடை: 3.மூளை, தண்டுவடம் மற்றும் நரம்புகளால் ஆனதே நரம்பு மண்டலம் ஆகும்
விளக்கம்: நரம்பு மண்டலம் இருவகைப்படும் மைய நரம்பு மண்டலம், வெளிப்புற நரம்பு மண்டலம் ஆகும். வெளி உலகத்தை தெரிந்துகொள்ள நம் உடலில் ஐந்து உணர் உருப்புகள் உள்ளன அவைகள் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியனவாகும்.
10. சித்தமருத்துவம் உருவாக்கியது யார்?
விடை: 1. பதினெட்டு சித்தர்கள்
விளக்கம் : சித்த மருத்துவம் என்பது நம் தமிழ்நாட்டில் தோன்றி மிகத் தொன்மையான தமிழர் மருத்துவ முறையாகும். பழங்கால இலங்கியங்களில் மருத்துவ குறிப்புகள் உள்ளன. சித்தி என்பது சித்திக் என்ற சொல்லில் தோன்றியது. சித்தர்களில் அகத்தியரை முதல் சித்தர் என்று குறிப்பிடுவார்கள். சித்தர்களின் பொதுவான கருத்து உணவே மருந்து ஆகும்.