முதல்வர் ஸ்டாலினின் ரகசிய ஆர்டர்…!
திமுக தலைமை தனது கட்சி நிர்வாகிகளுக்கு மிக முக்கிய ஆர்டர் ஒன்றை கொடுத்துள்ளதாக தகவல் கசிந்த்துள்ளது.
நடந்த முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக எளிதாக வெற்றி பெற்று விடும் என ஸ்டாலின் கணித்த நிலையில் அது பொய்யும் வக்லையும், பல இடங்களில் திமுக தோல்வியை சந்தித்தது. குறிப்பாக கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் திமுக படு தோல்வியை சந்தித்தது. மேலும் சில இடங்களில் தோல்வி முனையில் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அப்செட்டில் இருந்த முதல்வர் ஸ்டாலின் அப்போதே இது தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் வந்த அறிக்கையை பார்த்த அதற்கேற்ப களையெடுப்பு வேலைகள் நடைபெற்றன. குறிப்பாக அதிருப்தியில் உள்ளடி வேலை பார்த்தவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தன.
இந்நிலையில் அப்போது விட்ட கோவை, உள்ளிட்ட தொகுதிகளில் இப்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பிடித்து விட வெஏண்டும் என திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகாரங்கள் அதிகரித்து வழங்கப்பட்டன. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றார். கோவை திமுகவில் அவர் வைப்பது தான் சட்டம் என்ற சூழல் உருவானதால் சீனியர்கள் உள்ளுக்குள் குமுறி வந்தனர்.
இந்நிலையில் நடைபெறவுள்ள, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சீட் வழங்காத ஆத்திரத்தில் சிலர், திமுகவினரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியலை இன்று இரவுக்குள் அறிவாலயத்துக்கு அனுப்புமாறு மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் வெள்ளை சாட்டை அணிந்த கருப்பு ஆடுகள் எந்திரன் பட பாணியில் கண்டறியப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கபடவுள்ளதாக தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள்.