தை பிறந்தால் பூமிக்கு வழிப்பிறக்குமா!
தை பொங்கலுக்கு பூமி தமிழ் சினிமாவின் புதியதொரு சாமி என்று சொல்லலாம். பூமி திரைப்படம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் ஜெயம்ரவியின் 25-வது படமாகும். இந்த படம் இருக்கின்றது. கார்ப்பரேட்டுகள் எதிர்க்கும் ஒரு சாமானிய படித்த விஞ்ஞானி என்பது கதையாக அமையும்.
பொங்கலுக்கு பூமியொரு சாமி
கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் பெருகி இருக்கும், இந்த சூழலில் அடிப்படை விழிப்புணர்வு என்பது அனைவருக்கும் அவசியம் இருக்க வேண்டும் . சாமானியன் படம் பார்க்கும்போது எந்தவித சங்கடங்களும் தெரிந்திருக்காது. ஆனால் சினிமா தெரிந்த மேதாவிகள் படம் பார்த்தார்கள் எனில் பல குறைகள் சொல்லத்தான் செய்வார்கள்.
மேலும் படிக்க : பிரபல நடிகை வரலட்சுமி அதிர்ச்சி பேட்டி!
இணைய வேக உலகில் பாரம்பரியம் தொலைக்கும் மக்கள்
உண்மையில் இந்த தை திருநாள் நமக்கு பாரம்பரியத்தின் முக்கியத்தை எடுத்துக்காட்டும் முக்கிய திருநாளாக இருக்கின்றது. நமது பாரம்பரியத்திற்கு இன்றைய அதிவேக கார்பரேட் உலகில் நமக்கு நாமே வேட்டு வைக்கின்றோம் என்பதனை பூமி திரைப்படம் காட்டி இருக்கின்றது.
பூமி திரைக்கதை
நாசாவிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் மிகப் பெரும் வாய்ப்பை தாய் மண்ணுக்காக விவசாயம் செழிக்க பெருங்கனவு பணியை தொடர்ந்து விட்டு விட்டு மீண்டும் இந்தியாவிற்கு திரும்புகின்றார். இந்தியாவின் விவசாயிகள் தேவைகள் என்ன அவர்கள் காக்கப்பட வேண்டிய அவசியம் ஆகியவற்றை இரண்டு மணி நேரத்தில் முடிந்த அளவிற்கு வழிபடுகின்றனர்.
குளிர்பானங்கள், ஹைபிரிட் விதைகள் சுசேதி பயன்பாடு
அதேபோன்று வெளிநாட்டு குளிர்பானங்கள் மற்றும் பீசா பர்கர் நூடுல்ஸ் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மேலும் ஹைப்ரிட் விதைகள் இவற்றின் தீமைகளையும் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதைவிட நாட்டிற்கு தற்போது மிகவும் அவசியமான இயற்கை விவசாயத்தை நமது முன்னோர்கள் பயன்படுத்திய விதையை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பது குறித்து விளக்கி இருக்கின்றனர்.
இலுமினாட்டி கதைக்களம்
பொதுவாக சினிமா என்றாலே கமர்சியல் இருக்கத்தான் செய்யும், வேகமாக காட்சிகள் நகர தான் செய்யும். அதைப்போலத்தான் இந்த பூமி திரைப்படமும் இலுமினாட்டி என்றழைக்கப்படும் 13 குடும்பங்கள் இந்த திரைக்கதைகள் பேசப்படுகின்றது.
விவசாயமா விண்வெளியா
விவசாயத்தின் அவசியத்தை சுட்டிக்காட்டி விண்வெளிக்கு செல்ல வேண்டியதன் காலத்தை தள்ளிப் போடு இந்த கதை ஆனது நம்மை கொட்டுவது போல இருக்கின்றது. ஆனால் இரண்டு முக்கியம் என்பதை இது திரைக்கதையும் விளங்கியிருக்கிறது.
பாரம்பரிய இயற்கை விவசாயம்
பூமி திரைக்கதை இரண்டு மணி நேரம் 7 நிமிடம் ஓடும் படமாகும். இந்தியாவில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் மற்றும் நமது பாரம்பரிய விவசாய முறை அழிந்து போகின்றது என்பதை முழுக்க சினிமாத்தனமாக காட்டியிருக்கின்றனர்.
பூமி திரைப்படம் இயக்கம்
பூமி திரைப்படத்தை இயற்றியவர் இயக்குனர் லட்சுமன் மற்றும் இசையமைத்தவர் இமான் இருவரும் தங்களது பணியை சரியாக செய்திருக்கின்றனர். இதற்கு மேல் இறைவன் விட்ட வழி என்று தான் சொல்ல வேண்டும். நாம் பல மசாலா படங்களை வெற்றிப்படம் கதையாக்கி இருக்கின்றோம். இதுபோன்ற கருத்தையும் ஆதரிக்கலாம் என்பது சேட்டு குச்சியின் கருத்தாகும் படக்குழுவிற்கு நன்றி.
மேலும் படிக்க : புத்தம் புது காலை பொன்னிற வேளை
ஜெயம் ரவியின் பேசும் சினிமாக்கள்
ஜெயம் ரவி முதல் மூன்று படங்களில் காதல் மற்றும் சாக்லேட் பாய் கோணத்தில் நடித்திருக்கின்றார். தற்போதைய காலகட்டங்களில் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு சமூக காரணத்தை பின்னணியாக வைத்து பேசும்படியாக இருக்கின்றது. தன்னை சிறந்த நடிகராக நிருபிக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து முயல்கின்றார். உண்மையில் இவருடைய புதிய முயற்சிகளை பாராட்டியாக வேண்டும்.
ஜெயம் ரவி நடித்த பேராண்மை, அடங்க மறு, போன்ற படங்கள் முக்கியமானவையாகும். நாட்டில் இருக்கும் சில நல்ல துறைகளை முன்னிறுத்தி மக்களுக்கு பொழுது போக்குடன் பொது அறிவும் கொடுக்கின்றது. சினிமா என்றால் மசாலாவாக காட்சிகள் இருக்கும். இரண்டு மணி நேரத்தில் கதை நகர்ந்த வேகம் நன்றாக அமைந்திருக்கின்றது.
விழிப்புணர்வு கதாபாத்திரங்கள்
வில்லன் கதாபாத்திரத்திற்கு தகுந்த இடம் கொடுத்திருக்கின்றனர். தமிழன் மற்றும் இந்தியன் வந்தே மாதரம் போன்ற சுதேச கருத்துக்கள் இந்த கதையில் ஆளுமை செய்திருக்கின்றன. இதுபோன்ற சினிமாக்கள் வரும்போதுதான் 21 ஆம் நூற்றாண்டு அதிவேக இணைய இளைஞர்களுக்கு நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பது காற்று பட்ட வேகத்தில் ஆகுது தெரியவரும்.
நாட்டின் இயற்கை வளங்கள் காக்கப்படல்
தாய்நாடு என்பதும் அந்த நாட்டின் முக்கிய வளமான விவசாயம் என்பதும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம் என்பதை இந்த கதை முன்னிறுத்தி இருக்கின்றது. கொரோனா காரணமாக ஓடிடி பிளாட்பார்மில் இந்த படமானது வெளிவந்திருக்கின்றது.
பூமி படக்குழுவினர்
ஜெயம் ரவி நடிப்பு மற்றும் பூமிப் படக்குழுவினர் அனைவரும் கதைக்கு ஏற்றவாறு பயணிக்கின்றனர். துடிப்புமிக்க இளைஞர் மற்றும் உலகம் கற்ற இளைஞராக இருப்பதால் இந்த கதையில் பூமியாகிய கதாபாத்திரம் மட்டும் பெரிய அளவில் ஆளுமை செய்வது போல தோன்றும். ஆனால் கதை முழுக்க சுதேசியம் பாடியிருப்பதால் இந்த கதையை நாம் நிச்சயம் ஆதரிக்கலாம்.
விழிப்புணர்வான கருத்துக்கள்
இரண்டு மணி நேரத்தில் நமக்கு இது போதும் என்கிற வாக்கு கதையானது வெளிவந்திருக்கின்றது. ஜெயம் ரவிக்கு நான் பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். இந்த சினிமாவை பார்க்கும் மக்கள் ஒரு முழுமையாக புரிதலை உள்வாங்கிக் கொண்டார்கள் என்றால் அது சிறப்பு ஏனெனில் சரியான நேரத்தில் பூமி படம் வெளியாக இருக்கின்றது.
மக்களுக்கு விவசாயத்தின் அவசியம் புரிய வேண்டும். மேலும் விவசாயிகள் காக்கப்பட வேண்டும். மக்கள் இலவசத்தை நம்பி ஏமாறக்கூடாது என்பதை தெளிவாக விளக்கி இருக்கின்றனர்.
பூமி தைப்பிறந்தால் நமது விவசாயப் பூமிக்கு வழிப் பிறக்குமா கேள்வி இந்த படம் நமக்கு காட்டுகின்றது.