நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா…..குஷியில் பாஜக..! திமுகவுக்கு என்ன தான் ஆச்சு..?
பாஜக வேட்பாளரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் அவர், வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை பாஜகவினர் கொண்டாடி வர, உள்ளூர் மேல்மட்ட திமுகவினர் மீது அடிமட்ட தொண்டர்கள் கொதித்து போகியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கிறது. ஆனால் அதிமுக கேட்ட இடங்களை கொடுக்கததால் கோபமடைந்த பாஜக புள்ளிகள் தனியாக களத்தில் இறங்கலாம் என முடிவெடுத்தனர்.
இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் மட்டும் பாஜக தனித்து போட்டியிடுவதாகவும், மற்றப்படி கூட்டணி தொடரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதனால் அதிமுக தலைகள் பெரும் குஷ்யடைந்தனர். காரணம் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவின் கூட்டணி தான் என கூறப்பட்டது.
மேலும் சில பெரும் புள்ளிகள் கூட்டணியை முறித்துக் கொள்வது நல்லது என தலைமை தெரிவிக்க, நோ கூட்டணி முறிந்தால் பல பிரச்சனைகள் உண்டாகலாம் குறிப்பாக சில அப்போதைய அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கசப்புடன் கூட்டணியில் இருந்தது அதிமுக. இது திமுகவுக்கு பெரும் சாதகமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது அதிமுக தனித்து போட்டியிடும் என்றும் அறிவிப்பால் கொஞ்சம் அப்செட்டானதாம் திமுக, இது தொடர்பாக விசாரிக்கையில் இதற்கு முன்னதாக பாஜகவுடன் சேர்ந்து அதிமுக போட்டியிடுவதால் அடிமை அரசு, என்று ஓட்டுக்கள் கேட்டோம், ஆனால் தற்போது எதைக் கேட்டு ஓட்டு கேட்பது என யோசித்து வருகிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சைலண்டாக ராமநாதபுரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்று தேர்வு செய்யப்பட்டது.திமுகவை கேள்விக்குள்ளாகியுள்ளது.
கமுதி 14வது வார்டில் பாஜக வேட்பாளர் சத்யா ஜோதிராஜாவை எதிர்த்து யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யவில்லையாம்.. அதிமுக, மட்டுமில்லை, திமுக உட்பட எந்த கட்சிக்காரர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லையாம்.. அந்த வார்டில் சுயேச்சைகள் யாரும் பாஜகவை எதிர்த்து போட்டியிடாததால் சத்யா ஜோதிராஜா போட்டியின்று வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளாராம். தமிழகத்தில் பாஜக மலரவே மலராது எனக்கூறி வந்தவர்களுக்கு, இப்போது தான் வேர் போட்டுள்ளதாகவும், அடுத்த பருவத்தில் மலர்ந்து விடும் என உற்சாகமாக பேசி வருகிறார்களாம்…