உத்திர பிரதேசத்தில் சாதனை படைத்த பாஜக…படுகுழியில் காங்…!
நடந்து முடிந்த உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கோவா, மற்றும் பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும், கோவாவில், பாஜகவும், அதேபோல் மணிப்பூரில் பாஜகவும் தொடர்ட்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 இடங்கள் தேவைப்படுகிறது. இதில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை தாண்டி பாஜக முன்னிலை வகிக்கிறது. 267 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜகவிற்கு அடுத்ததாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 126 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை தாண்டிவிட்டதால் அம்மாநிலத்தில் ஆளும் பாஜகவே மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்த தேர்தல் ஆனையம், தற்போது அந்த தடையை நீக்கியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பராம்பரிய மாவட்டமாக கருதப்படும் ரெபரேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.
கடந்த 1980 மற்றும் 1985-ம் ஆண்டுகளில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி இரு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்தது. அதன்பிறகு தற்போது பாஜக 2017 மற்றும் 2022-ல் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. இதேபோல் உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்ற நிலையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். தற்போது 2022-ம் ஆண்டு தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் களமிறக்கப்பட்டநிலையில், அவரே மீண்டும் முதல்வராக உள்ளார். சுதந்திரத்திற்குப் பின் தொடர்ந்து இருமுறை முதல்வர் என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெற்று சாதனை படைத்துள்ளார்.