TOP STORIESசெய்திகள்

பன்றி இதயத்தை பொருத்தி அறுவை சிகிச்சை செய்த நபர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் பன்றியின் இதயத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்துகொண்ட மனிதர், 2 மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளது அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 57 வயது மனிதருக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்ததாக தெரிவித்தனர். மிகவும் சிக்கலான இந்த மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்களுக்குப் பிறகு, அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.

இந்தியாவில் இதேபோன்ற ஒரு அறுவை சிகிச்சை முறை, 24 ஆண்டுகளுக்கு முன்பே சோதனை செய்து பார்க்கப்பட்டது.அசாம் மாநிலத்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.தனிராம்-பருவா, இதயக் கோளாறு உள்ள 32 வயது நபருக்கு பன்றியின் இதயத்தையும் நுரையீரலையும் மாற்றம் செய்தார்.

ஆனால், உடலில் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த நபர் ஒரு வாரம் கழித்து உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் பல இடங்களில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், மனித உறுப்புகள் மாற்றுச் சட்டம்-1994இன் கீழ் மருத்துவர் பருவா கைது செய்யப்பட்டு 40 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவத்தை விசாரித்த அசாம் மாநில அரசு, இந்த மாற்று அறுவை சிகிச்சை சோதனை முறை “நெறிமுறையற்றது” என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அமெரிக்காவில் பன்றியின் இதயத்தை பொருத்தி அறுவை சிகிச்சை செய்து கொண்ட மனிதர் 2 மாதங்களுக்கு பின் உயிரிழந்துள்ளது அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *