பாரதிகண்ணம்மா சீரியல் ஹீரோவின் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் கலங்கிய அர்ச்சனா
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் வெளியாகி இன்று முதல் இடத்தில் இருந்து இருந்து வரும் சீரியலாக பாரதி கண்ணம்மா சீரியல் உள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரையும் புகழையும் பெற்றவர் பாரதிகண்ணம்மா சீரியல் ஹீரோவாக வரும் அருண்.
இதில் ரோஷினி ஹீரோயினியாக நடித்து வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் சில மாதங்களுக்கு முன்பு இவர் சீரியலில் இருந்து விலகினார். ரோஷினி விலகியதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது ஆனால் அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் அடுத்த ஹீரோயினியாக மாடல் துறையில் இருந்து வந்த வினுஷா கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில நாட்களாக பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் மற்றும் ராஜா ராணி சீரியல் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனாவும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இந்த செய்தி குறித்து அவர்கள் இருவருமே எந்த ஒரு அப்டேட்டும் செய்யவில்லை. எனவே ரசிகர்கள் மத்தியில் இவர்கள் உண்மையாகவே காதலிக்கிறார்களா அல்லது விஜய் டிவி ப்ரோமோவிற்காக இப்படி எல்லாம் வதந்திகளை பரப்பி வருகிறதா என்று பேசப்பட்டு வந்தனர்.
மேலும் படிக்க : பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு காவ்யா விலக இதுவா காரணம்
இப்படி பேசி வந்த நிலையில் ஒரு போட்டோவை அருண் மற்றும் அர்ச்சனா வெளியிட்டுள்ளனர் இதில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர் இதில் ரித்திகாவும் உடன் உள்ளார். எனவே இவர்கள் காதலிப்பது உறுதி என்று அனைவரும் இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஆனால் இவர்கள் இருவருமே தற்போது ஒன்றாக உள்ள புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டுள்ளனர் தாங்கள் காதலிப்பது குறித்து எந்த ஒரு செய்தியையும் அவர்கள் இன்று வரை வெளியிடவில்லை….
மேலும் படிக்க : சீயான் 60 பட குழுவில் இணையும் புது நபர் யார்?