சினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்விழிப்புணர்வு

இனிமேல் இந்த சேனல்கள் வராது.. தமிழ்நாட்டில் நிறுத்த திட்டமிட்ட சேனல்கள்..

இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவரும் வேலையை தேடி ஓடவே நேரம் சரியாக உள்ளது . பல வருடங்களுக்கு முன்பெல்லாம் குழந்தைகளை வீதியில் பார்க்க முடியும். ஆனால் இப்பொழுது யார் வீட்டில் எத்தனை குழந்தை உள்ளது என்று தெரியாத அளவிற்கு குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை அத்தனை பேரையும் வெளியே வரவிடாமல் கட்டிப்போட்டு உள்ள ஒரு விஷயம் என்னவென்றால் நமது தொலைக்காட்சியில் சேனல்களில் புதுசு புதுசாக ஒளிபரப்பப்படும் நிகழ்வுகள் தான். இப்பொழுது உள்ள மக்கள் ஒவ்வொரு சேனல்களுக்கும் ரசிகர்களாகி விட்டார்கள் .அதை விட்டு வெளியே வர முடியாத அளவு சேனல்களில் ஷோக்கள் அதிகமாகிவிட்டது.

இவ்வாறு அனைத்து சேனல்களும் அனைவர் மனதையும் வைத்திருந்தாலும் கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகளின் மனதை ஈர்த்துள்ள சேனல் என்று ஒன்று இருந்தால் அது நமது சுட்டி டிவி தான். ஆம் குழந்தைகள் தற்பொழுது வெளியில் விளையாட வருவதில்லை காரணம் குழந்தைகளை ஈர்த்துள்ள சேனல்கள் தான்.இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு அவர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து பேசவும் நேரமில்லை,விளையாடவும் நேரமில்லை அதேசமயம் அவர்களை வெளியே விடுவதற்கும் மனதில்லை. இப்படி இருக்கையில் வீட்டில் உள்ள குழந்தைகள் என்னதான் செய்வார்கள் அவர்களுக்கு ஒரே பொழுது போக்காக அமைவது பொம்மை டிவி தான் அதிலும் பல வருடங்களாக அனைத்து குழந்தைகளையும் கவரும் சேனலாக சுட்டி டிவி உள்ளது.

மேலும் படிக்க : நகைச்சுவை கலைஞரான ராஜகோபால் இயற்கை மரணம் அடைந்தார்

ரசிகர்களை அதிகமாக சேர்த்த சுட்டி டிவி

இந்நிலையில் ரசிகர்களை அதிகமாக சேர்த்த சுட்டி டிவி தற்பொழுது நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆம் நமது பேமஸான சன் டிவியின் ஒரு கிளையாக உள்ளது தான் சுட்டி டிவி இந்நிலையில் சன் டிவி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.சுட்டி டிவி மட்டுமல்லாமல் வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் chintu TV , kochu TV , kushi TV அனைத்து சேனல்களையும் நிறுத்த போவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் பலரும் பொம்மை சேனல் பார்ப்பதை ஒரு பொழுதுபோக்காக வைத்துள்ளனர் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி அவர்களும் தங்களின் பொழுதை கழிக்க இது ஒரு நல்ல சேனலாக அமைந்தது. இந்நிலையில் இந்த செய்தியை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் படிக்க : இன்று சுஷாந்த்தின் தில் பெச்சாரா டிரைலர் ரிலீஸ் ரசிகர்கள் குமுறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *