பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளுக்கான கால அட்டவணையை வெளியிடாத தாமதத்திற்கான அறிவிப்பு
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் ஐபிஎல் அட்டவணை இன்னும் வெளியாகவில்லை இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின் படி போட்டி தொடங்கும் முதல் நான்கு நாட்களுக்கு வெளிநாட்டு வீரர்களின் வருகையை அதிகம் எதிர்பார்க்காது.
அணிகள் இடையே போட்டி நடத்தப்படும். அப்போதும் வெளிநாட்டு வீரர்கள் வரவில்லை என்றால் போட்டி தொடர்ந்து நடத்தப்படும். இதெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு போட்டி அட்டவணை தயார் செய்யப்படும் என பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதே சமயம் வீரர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவை பொறுத்து அட்டவணை தயார் செய்வார்கள் என்றும் இவையெல்லாம் தான் தாமதத்திற்கான காரணம் என்றும் கூறப்பட்டுள்ளன.
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இப்போது வரை போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை.
கொரோனா வைரஸ் பரவலின் அச்சம் காரணமாக மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்பு பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு போட்டிகளை செப்டம்பர் முதல் அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தன.
இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் போட்டிக்கு தயாராகும் வகையில் துபாய் புறப்பட்டு சென்றுள்ளனர். விதிகளின் படி அனைத்து வீரர்களும், அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப் படுத்தலில் இருப்பார்கள் என்று கூறப்பட்டன.
இந்த காலக் கட்டத்தில் அவர்கள் அடுத்தடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டன. எனவே ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட இதற்கான காரணத்தை பிசிசிஐ இவ்வாறு தெரிவித்துள்ளனர்.