வாழைத்தண்டு ரெசிப்பீஸ்
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும். வாழைத்தண்டு நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இதை கொடுத்து வரலாம். மேலும் செரிமானத்தை எளிதாக்கும். மாற்றத்திற்கு உதவுகிறது. அசிடிட்டி அமிலத் தன்மையால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
வாழைத்தண்டு சட்னி
தேவையான பொருட்கள் : நாரை நீக்கி சுத்தம் செய்ய வாழைத்தண்டு அரை கப், தேங்காய்த் துருவல் அரை கப், கடலைப்பருப்பு இரண்டு ஸ்பூன், வர மிளகாய் 5, புளி சிறிது, கறிவேப்பிலை சிறிது, எண்ணெய், உப்பு தேவையான அளவு. தாளிக்க கடுகு கால் ஸ்பூன், உளுத்தம்பருப்பு கால் ஸ்பூன், பச்சை மிளகாய் 2.
செய்முறை : ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு, தேங்காய் ஒவ்வொன்றாக சேர்த்து இளம் வறுப்பாக வறுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து கொட்டவும். சுவையான வாழைத்தண்டு துவையல் தயார்.
வாழைத்தண்டு பொரியல்
தேவையான பொருட்கள் : சுத்தம் செய்த வாழைத்தண்டு ஒரு கப், தேங்காய் துருவல் அரை கப், சிறிய வெங்காயம் நறுக்கியது கால் கப், உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப. வர மிளகாய் 3, கறிவேப்பிலை சிறிது, கடுகு, சோம்பு தாளிப்பதற்கு தலா கால் ஸ்பூன்.
செய்முறை : ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளித்து வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு ஒவ்வொன்றாக வதக்கி பிறகு நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். காய் நன்றாக வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார்.