ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறை

சிவராத்திரி பிரதோசம் ஒரு சேர வரும் சிறப்பு நாள்

40 வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்த மைத்ரேய முகூர்த்தம் மற்றும் சிவராத்திரி பிரதோஷம் ஆகியவை ஒன்று கூடி வருகின்றது. இதனை நாம் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இதனால் வாழ்க்கையில் நாம் முன்வினை செய்த கர்மாக்கள், பாவங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, நமது வாழ்வில் விசேஷங்கள் கிடைக்கப் பெறலாம். பிரதோஷம் என்றால் வளருகின்ற ஒன்று ஆகும். அதாவது பிற என்றால் வளர்வது இதனை குறிக்கும், தோஷம் என்பது கர்மா கர்மாக்களை வளர்ப்பது அதாவது கர்மாக்களை தீர்ப்பது என்பதை குறிக்கும். நல்ல கர்மாக்களை நமக்குள் அதிகம் வளர செய்வதை குறிக்கும்.

மகிமைகளை நிறைந்த மாத சிவராத்திரி:

அதேபோல் மாத சிவராத்திரி இது மகத்தான நாள் நாம் வருட சிவராத்திரிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல் இதற்கும் கொடுக்க வேண்டும். இந்த மாத சிவராத்திரி முழுமையாக பின்பற்ற வேண்டும் இதற்கு விரதம் இருக்கிறது அவசியமாகும். முடியாதவர்கள் நோயாளிகள் போன்றோர் பால்,பழம் சாப்பிடலாம். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மாலை முதல் சிவராத்திரி முடியும் வரை உணவு தவிர்த்தல் சிறப்பாகும். இது பக்தி அதிகரிக்கும். இறை பற்றி உருவாக்கும். சிவபெருமானின் மீது அளவுகடந்த பக்தி பெருக செய்யலாம். இந்த சிறப்புமிக்க சிவராத்திரி தினத்தில் இரவு மூடித் திறப்பதன் மூலம் நமக்கு பிரபஞ்சத்திலிருந்து சக்திகள் கிடைக்கப் பெறலாம். அவை அனைத்தும் முதுகெலும்பில் தங்கி நமது ஆற்றலை அதிகப்படுத்துகின்றது.

இந்த சிவராத்திரியில் சிறப்பு என்னவென்றால் பிரதோஷம் சிவராத்திரி மைத்ரேய முகூர்த்தம் ஆகியவை ஒன்றுகூடி வருகின்றது.

மைத்ரேய முகூர்த்தம்

இந்த மைத்ரேய முகூர்த்தம் என்பது என்ன என்ற கேள்விகள் பல நமக்கு இருக்கின்றது மைத்ரேய முகூர்த்தம் என்பது பொதுவாக கடன் தீர்க்கும் சமயமென்று கருதப்படுகின்றது அதுமட்டுமல்ல அத்துடன் நமது செல்வம் பெருகவும் இந்த மைத்ரேய முகூர்த்தம் நமக்கு உதவிகரமாக இருக்கின்றது.

நாளை காலை 4 மணி முதல் 6 மணி வரை இருக்கும் மைத்ரேய முகூர்த்தம் நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுக்க வேண்டியது இருப்பின் அவருக்குக் கொடுக்க வேண்டி ஒரு சிறு தொகையை தனியாக எடுத்து வைக்கவும். இது அவருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் தனியாக எடுத்து வைப்பதன் மூலம் உங்களுக்கான செல்வம் பெருக செய்து அவருக்கு கொடுக்க வேண்டிய பணமும் கொடுக்க வைக்கும். இதை நீங்கள் அவருக்கு அப்போதே கொடுக்க முடியவில்லை என்றாலும் அல்லது நீங்களே தனியாகவும் எடுத்து வைக்கலாம் அது உங்களிடம் தொடர்ந்து செல்வ வளத்தை பெறச் செய்கின்றது.

இதனை நாம் முழுமையாக உணர்ந்து பின்பற்ற வேண்டும் மைத்ரேய முகூர்த்தம் நமது கடன் தொல்லையை தீர்ப்பது நமக்கான வருமானத்தை அதிகரிக்க செய்ய உதவும் அற்புதமான நேரமாகும் இதனை நாம் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் இது என்னங்க மைத்ரேய மூகூர்த்தம் ஒன்னும் விளங்கல என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும் சிலருக்கு கேள்விப்பட்டிருந்த எண்ணம் மீண்டும் நினைவுக்கு வரும் ஆனால் இந்த மைத்ரேய முகூர்த்தம் பின்பற்றுவது வாழ்க்கையை வளமாக்க செய்யும். காலை 4.30 மணிமுதல் 6.30 வரை இந்த மைதேரேய மூகூர்த்தம் இருக்கும் காலம் ஆகும்.

நாளை காலை மறக்காமல் இதனை பின்பற்றுங்கள் மாலை 4. 30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு விரதமிருந்து அபிஷேகப் பொருட்களை கொடுக்கலாம் நீண்ட நாட்களுக்கு பின் கொஞ்சம் தளர்வுகள் கிடைத்திருப்பதால் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் பக்தியை வளர்க்கலாம்.

வேண்டாங்க ரொம்ப பயமாயிருக்கு என்ற சூழல் இருந்தால் வீட்டில் இருந்து மாலை நான்கு முப்பது மணி முதல் 6 மணி வரை சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரமான ஓம் நம சிவய, ஓம் சிவய நம, ஓம் வயநமசி, ஓம் மசிவயந, ஓம் எனம் யநமசிவ போன்ற பஞ்சாட்சர மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் நமக்கான பஞ்ச பூதங்களின் அருள் கிடைக்கப்பெற்று வாழ்வு வளம் பெற செய்யலாம் ஆகவே பிரதோஷ காலத்தினைப் பக்தி பக்தியுடன் பின்பற்றுவோம் வாழ்வில் வளம் பெறுவோம்.

சிவபெருமானை பக்தியுடன் வணங்குவது என்பது சிறப்பாகும் அதுவும் மாத சிவராத்திரி மற்றும் பிரதோஷ காலம் ஆகியவை ஒருசேர வரும் நன்னாளில் பக்திப் பெருக்குடன் சிவபெருமானை வணங்கி வாழ்வில் சுபிட்சம் பெறுவோம் நீண்ட ஊரடங்கு மனக்கசப்பு அச்சம் கோவித் பயம் கடந்த பின்பு நமக்கு வரும் புதிய வாய்ப்பாக இந்த நாளை வணங்கி சிவபெருமானுடன் இணைந்து பக்தியை பெருக்குவோம்

மேலும் படிக்க

அருள் தரும் சிவ பெருமான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *