ஆரோக்கியம்வாழ்க்கை முறை

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

குளிர்காலத்தில் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்றுக் கொள்ளாது. கோடைக்காலத்தில் இருந்து திடீரென குளிருக்கு மாறும் சீதோஷ்ண நிலை. உடல் வெப்பநிலை குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது இன்னும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவுக்கு புரதச் சத்துகளும், விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • குளிர் காலங்களில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் கிருமிகள் பெருமையோடு வளரும்.
  • கோடைக்காலத்தில் இருந்து திடீரென குளிருக்கு மாறும் சீதோஷ்ண நிலை.
  • நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவுக்கு புரதச் சத்துகளும், விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் வரும் நோய்கள்.

குளிர் காலங்களில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் கிருமிகள் பெருமையோடு வளரும். சைனஸ், ஆஸ்துமா, தோல் நோய்கள், பாத வெடிப்புகள், சளி, காய்ச்சல், இருமல் என குளிர்காலத்தில் வரும் நோய்கள்.

நோய் எதிர்ப்புச் சக்திக் குறைவுக்கு புரதச் சத்துகளும், விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். பால், பாதாம், தேங்காய், மீன், முட்டை, இறைச்சி என புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ப்ராக்கோலி, அண்ணாச்சி பழம், ஆரஞ்சு, செர்ரி, பழம், சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், பீன்ஸ், பப்பாளி, ஆப்பிள், மாதுளை, பசலைக்கீரை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தி உணவு

பப்பாளி, ஆப்பிள், மாதுளை ஜூஸ் குடிப்பதை தவிர்த்து மென்று சாப்பிட வேண்டும். தண்ணீரை காய்ச்சி வடிகட்டி அருந்துவது நல்லது. குளிர்ந்த பானங்களையும், குளிரூட்டப்பட்ட உணவுகளை தவிர்த்தல் அவசியம்.

குளிர்காலங்களில் ரத்த ஓட்டம் குறைவதால் வாக்கிங், உடற்பயிற்சிகளை செய்வது நல்லது. சூடான சுக்கு பால், மிளகு, மஞ்சள் பால், இஞ்சி பால் என அடிக்கடி அருந்துதல் வேண்டும். மிளகு கலந்த வெஜிடபிள் சூப், மிளகு – பூண்டு ரசம் செய்து குடிக்கலாம். பாலக் கீரை, சிறு கீரை சூப், முருங்கைக்கீரை சூப் இவற்றை குடிப்பதால் இரத்தம் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *