இளவரசர் 2024-ல் வருவார்-ஆயிரத்தில் ஒருவன்2 !!!!!
ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பை பற்றி புது வருடப் பிறப்பான நேற்று செல்வராகவன் ஒரு ட்வீட் செய்துள்ளார். இப்படம் 2024 இல் வெளியாகும் என்றும் தனுஷ் இப்படத்தில் உள்ளார் என்றும் அறிவித்துள்ளார்.
தனுஷ் கொண்டாட்டம்
தனுஷ் இந்த அறிவிப்பை பற்றி இது செல்வராகவனின் நீண்டநாள் கனவு என்றும், இதற்காக நீண்ட நாள் காத்திருந்தோம் என்றும், இளவரசன் 2024 வருவார் என்றும் கூறியுள்ளார். இது மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றாகும்.
இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு
இதோ உங்கள் முன்னால்
@dhanushkraja
#a.o2
Originally tweeted by selvaraghavan (@selvaraghavan) n January 1, 2021.
2005 இல் ஆயிரத்தில் ஒருவன்
இந்த அறிவிப்பு ஆயிரத்தில் ஒருவன் பட ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தத் திரைப்படம் செல்வராகவன் இயக்க, கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் நடிக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைக்க 2005 இல் வெளியானது.
மேலும் படிக்க : பிறந்த நாளைக் கொண்டாடாத துக்கத்தில் இன்ஸ்டாகிராம்
தமிழ்சினிமா கொண்டாடத் தவறியப் படம்
வெளியான பொழுது படம் வரவேற்பை பெறவில்லை. ஆனால் சில வருடங்கள் கழித்து படைப்பின் உச்சம்!! தமிழ் சினிமா கொண்டாட தவறிய படம் எனக்கூறி அனைவரின் வரவேற்பையும் பெற்றது. மேலும் இத்திரைப்படத்தினை பலமுறை மறுவெளியீடு செய்த போதும் வரவேற்ப்பை பெற்றது, இறுதியாக டிசம்பர் 31 2020இல் மறுவெளியீடு செய்த போதும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
மேலும் படிக்க : மனதை கொள்ளை கொள்ளும் துருவ நட்சத்திரத்தின் ஒரு மனம்
தூதுவன் வருவான்..
வதை படுவான்…
மழலை விழிநீர் துடைப்பான்…
மாரி பொழியும்.
என்றும் சோழன்… சோழ தேசம் நோக்கி பயணம் என தற்பொழுது நினைத்தால்கூட புல்லரிக்கும் காட்சிகளுடன் நம் கண்முன் வந்து போகிறது.
காத்திருப்போம் 2024 வரை நம் சோழ இளவரசரின் வருகைக்காக!!!
Done By SRIMATHI