ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -24.10.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 24.10.2026

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 10.45 மணி முதல் 11.45 வரை

நல்ல நேரம் மாலை: 04.45 மணி முதல் 05.45 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை

குளிகை: காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன்

மேஷம் -ஊக்கம் குவியும்

ரிஷபம் -அன்பு உண்டாகும்

மிதுனம் -கவலை உண்டாகும்

கடகம் -முயற்சியில் வெற்றி

சிம்மம் – சிரத்தை அதிகரிக்கும்

கன்னி -விவேகம் தேவை

துலாம் -உற்சாகம் பிறக்கும்

விருச்சிகம்-போட்டி உருவாகும்

தனுசு – பாசம் ஏற்படும்

மகரம் -மறதி உண்டாகும்

கும்பம் -அமைதி உண்டாகும்

மீனம் -வெற்றி நிச்சயம்

கோமதி பூஜை

கோமதி பூஜை என்பது மகாலட்சுமியின் அருள் நிறைந்த ‘கோமதி சக்கரம்’ (Gomati Chakra) கொண்டு செய்யப்படக்கூடிய ஒரு சிறப்பு வழிபாடாகும். குஜராத்தில் உள்ள கோமதி நதியில் கிடைக்கும் இந்தத் தெய்வீகக் கல்லை வீட்டில் வைத்து வழிபடுவது செல்வம், மன அமைதி மற்றும் தொழில் முன்னேற்றத்தைத் தரும் என்பது ஐதீகம்.

புதியதாக வாங்கிய கோமதி சக்கரங்களை முதலில் கங்கை நீர் அல்லது பசும்பால் கொண்டு நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.பின் ஒரு சுத்தமான தட்டில் அவற்றை வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

வழிபாட்டின் போது “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” அல்லது மகாலட்சுமி மந்திரங்களை 108 முறை உச்சரிக்கலாம்.

பொதுவாக ஒற்றப்படை எண்ணிக்கையில் (கிட்டத்தட்ட 11 கோமதி சக்கரங்கள்) எடுத்துக்கொண்டு, அவற்றை ஒரு சிவப்பு நிற துணியில் முடிந்து பூஜை அறையில் வைத்து வழிபடலாம். இது மகாலட்சுமியின் பரிபூரண அருளைத் பெற்றுத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *